வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இவரை வெற்றி பெற வைக்க வேண்டும்! ஐஸ்வர்யா ஆர்மி அட்ராசிட்டி!!
தமிழ் பிக் பாஸ் இரண்டாம் பாகம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் யார் வெற்றியாளர் என தெரிந்துவிடும். இதில் இறுதி போட்டியாளர் நால்வரும் பெண்கள். ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா தத்தா, விஜயலக்ஷ்மி ஆகியோர் தான் இறுதி போட்டியாளர்கள்.
இதில் ஏராளமான எபிசோட்களில் ஓவராக சேட்டை செய்தும் பிக் பாஸ் வீட்டில் எலிமினேஷனில் தப்பித்து இறுதி வரை சென்றுள்ளவர் ஐஸ்வர்யா.
தற்போது ஐஸ்வர்யா ரசிகர் ஒருவர் இவருக்கு ஓட்டு கேட்டு போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அதில் தமிழகத்திற்க்கு வந்து தமிழ் கற்று தமிழுக்கு பெருமை சேர்த்த ஐஸ்வர்யாவை வெற்றி பெற செய்து வந்தாரை வாழவைத்த தமிழகம் பெருமை அடைய செய்வோம் என ஓட்டு கேட்டு போஸ்டர்கள் ஒட்டபட்டுள்ளன.
DINASUVADU