கமல்ஹாசன் : பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் நம்மளுடைய நினைவுக்கு வருவது ஆண்டவர் கமல்ஹாசன் தான். இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் சீசனில் இருந்து தொகுத்து வழங்கி இந்த நிகழ்ச்சியை மக்களுக்கு மத்தியில் பிரபலமாக்கிய பெருமை கூட அவருக்கு தான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு கலகலப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியை 7 சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார்.
இதுவரை 7- சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்ததாக 8-வது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது. வழக்கம் போல இந்த 8-வது சீசனையும் நம்ம கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் விலகி உள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விலகியது குறித்து கமல்ஹாசன் அறிக்கை ஒன்றையும் வெளியீட்டு இருக்கிறார். இது தொடர்பாக வெளியாகி இருக்கும் அறிக்கையில் கமல்ஹாசன் கூறியதாவது ” 7 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து தொடங்கிய எங்கள் பிக் பாஸ் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
முந்தைய சினிமா கமிட்மென்ட் காரணமாக, பிக் பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உங்கள் இல்லங்களில் உங்களைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. உங்கள் அன்பையும் பாசத்தையும் நீங்கள் எனக்குப் பொழிந்திருக்கிறீர்கள், அதற்காக உங்களுக்கு என் என்றென்றும் நன்றி இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை இந்தியாவின் சிறந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக மாற்றுவதற்கு போட்டியாளர்களின் உங்கள் உற்சாகமான மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவே அடிப்படை. தனிப்பட்ட முறையில், இந்த நிகழ்ச்சியில் நான் எனக்கு தெரிந்த விஷயங்களை நேர்மையாக பகிர்ந்து கொண்டேன். அதைப்போல சில விஷயங்களையும் கற்றுக்கொண்டேன். அனுபவத்திற்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். நாங்கள் ஒன்றாக நேரம் செலவழித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கடைசியாக, விஜய் டிவியின் அற்புதமான குழுவிற்கும், இந்த நிறுவனத்தை மாபெரும் வெற்றியடையச் செய்வதில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு குழு உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சீசன் இன்னொரு வெற்றியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்’ எனவும் சற்று உருக்கமாக அறிக்கையில் கமல்ஹாசன் பேசி உள்ளார். கமல்ஹாசன் நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில், பலரும் நீங்கள் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி நன்றாக இருக்காது என்று கூறி வருகிறார்கள்.
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…