பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறு விறுப்பாக போய் கொண்டிருக்கும் நிலையில், மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் செய்யும் செயல்கள் முகம் சுளிக்க வைத்து வருகிறது என்றே சொல்லவேண்டும். இதில் குறிப்பாக பூர்ணிமா அடிக்கடி பிக் பாஸ் குறித்து விமர்சித்து பேசி வருவது ரசிகர்களை கட்டுப்படைய செய்துள்ளது. நேற்று கூட பூர்ணிமா பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி விமர்சித்து பேசியிருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதற்கு முன்பு நடந்த சீசன்களில் எல்லாம் மிகவும் வலிமையான போட்டியாளர்களை வெளியே அனுப்பிவிடுவார்கள். அவர்களுக்கு பதிலாக சும்மா சம்மந்தமே இல்லாதவர்கள் எல்லாம் பைனலில் வந்து நிற்பார்கள் என்பது போல பேசினார். அதைப்போல மாயாவும் அடிக்கடி சக போட்டியாளர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பூர்ணிமா, மாயா இருவருமே எப்போதும் தங்கள் இருவரும் தான் இந்த போட்டியை சரியாக விளையாடுவது போலவும் தங்களுக்குள்ளே பேசியும் வருகிறார்கள். இந்த நிலையில், இருவரும் செய்த ஒரு செய்யலை கண்டு மிகவும் கடுப்பாகி பிக் பாஸ் அவருக்குழு எச்சரிக்கையை கொடுத்துள்ளது.
கூல் சுரேஷ் சும்மா லிப் -ஸ்டிக் போட்டு நடிச்சிட்டு இருக்காரு! கடுமையாக விமர்சித்த சுசித்ரா!
அப்படி என்ன செய்தார்கள் என்றால் இருவரும் தங்களுடைய மைக்குகளை கழற்றி வைத்துவிட்டு ஒரு ரூமிற்குள் சென்றுவிட்டு சில நிமிடங்கள் உள்ளே இருந்துவிட்டு வெளியே வந்தார்கள். வெளிய வந்தவுடன் இருவரும் முகம் கழிவுவிட்டு மேக்கப்பும் போட்டுகொண்டு பேசிக்கொண்டு இருந்தார்கள்.
அப்போது கோபத்துடன் பிக் பாஸ் மாயா உங்களுடைய மைக்கை மாட்டுங்கள் மைக்கை மாட்டுங்கள் என இரண்டு முறை கூறியது. இதனை பார்த்த பூர்ணிமா சிரித்துக்கொண்டிருந்த நிலையில், அவரையும் மைக்கை மாட்ட சொல்லி பிக் பாஸ் எச்சரித்தது. இதுவரை இல்லாத வகையில், நேற்று அவர்களை எச்சரிக்கும் போது மிகவும் கோபத்துடன் பிக் பாஸ் பேசியது.
ஏற்கனவே, சரியாத மரியாதை கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு பிரதீப் ஆண்டனி மீது எழுந்த நிலையில், அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வீட்டை விட்டு பிக் பாஸ் வெளியே அனுப்பியது. தற்போது அவரை தொடர்ந்து பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் செய்து வரும் செயலால் ரசிகர்கள் இவர்களுக்கும் ரெட் கார்ட் கொடுங்க என்பது போல கூறி வருகிறார்கள்.
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…
சென்னை: தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
சென்னை: குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை…
நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் மற்றும் எத்தனை விளக்கு ஏற்றலாம் என்பதை காணலாம். சென்னை :நாம் இறைவனை வழிபடும்…
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…