Nixen - Archana [File Image]
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறு விறுப்பாக போய்க்கொண்டு இருக்கும் நிலையில், பிரதீப் ஆண்டனி சர்ச்சையை தொடர்ந்து, மற்றொரு விஷயம் என்னவென்றால் வீட்டின் இளம் போட்டியாளர்களான நிக்சன் மற்றும் ஐஷ்வர்யாவின் காதல் கிசுகிசுப்பு தான். ஆனால், குறைந்த வாக்குகள் காரணமாக கடந்த வார இறுதியில் வெளியேற்றப்பட்டார் ஐஷு.
இன்றைய எபிசோடின் முதல் ப்ரோமோவில், “நான் ஐஷுவும் பேசுனது தப்பு என்றால் மணியும் ரவீனாவும் பேசுவதும், விஷ்ணுவும் பூர்ணிமாவும் செய்வதும் தவறுதான்” என்று விசித்ராவிடம் மிகவும் கோவமாக நிக்சன் கத்துகிறார்.
இதனையடுத்து, விசித்ரா, ‘மரியாதையாகப் பேசு’ என்று சொல்ல, அதற்கு நிக்சன், “நீ என்னை மதித்தால்தான் உன்னை நான் மதிப்பேன், நீ யாராக இருந்தாலும் சரி, அர்ச்சனா தவறாகப் போவதற்கு நீதான் காரணம்” என்று கூறுகிறார்.
முதலில் ராஷ்மிகா இப்போ கஜோல்! அடுத்தடுத்து டீப் ஃபேக் வீடியோவால் அதிர்ச்சி!
பின்னர் இதில், அர்ச்சனா தலையிட்டு, நான் என்ன கெட்டு போய்ட்டேன் நீங்க பார்த்தீங்க? ஐஷூ வீட்ல 40 நாட்கள் ஒண்ணுமே பண்ணாம நிக்சன் உடன் இருந்த காரணம் என்று குற்றம் சாட்டினார். மேலும், எல்லாரும் ஒரு நாள் வெளியே தான் போக போறோம் அப்போ போய் உண்மையை தெரிந்து கொள்ள ஐஷுவைச் சந்திக்குமாறு நிக்சனுக்கு பதிலடி கொடுத்தார்.
பிக் பாஸ் வீட்டுக்குள்ள பொண்ணுங்க எந்த வேலையும் செய்யுறது இல்ல! கிழித்தெறிந்த வத்திக்குச்சி வனிதா!
இப்படி, விசித்ராவுக்கு ஆதரவாக அர்ச்சனா நிக்க ஒற்றை ஆளாக சண்டை போடுகிறார் நிக்சன். இந்த ப்ரோமாவை வைத்து பார்த்தால் பிக் பாஸ் வீட்டில் ஒரு கலவரம் நடப்பது போல் தெரிகிறது. சரி எது என்னவோ என்ன நடக்குதுனு பொறுத்திருந்து பார்க்கலாம்.
சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…
மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…
மலேசியா : தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…
சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…
பர்ஹைட் : ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தின் பர்ஹைட் என்கிற பகுதியில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த மார்ச் 28ம் தேதி சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா…