முதல் நாளே ஆட்டம் ஆரம்பம்…வீட்டை இரண்டாக பிரித்த பிக் பாஸ்!

BiggBossTamil

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் நேற்று தொடங்கியுள்ள நிலையில், முதல் நாளே பிக் பாஸ் வீடு கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த பிக் பாஸ் வீட்க்குள் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் கலந்துகொண்டுள்ளார்.

இவரை தவிர சீரியல் நடிகைகள் ரவீனா, பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா தேவி, நடிகர் கவினின் நண்பர் பிரதீப் ஆண்டனி, யூடியூபர் பூர்ணிமா ரவி, வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா, உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர்.

பிக் பாஸ் வீட்டின் முதல் நாளிலே தலைவருக்கான போட்டி நேற்று தொடங்கியது, இரண்டாவது ஆளாக உள்ளே நுழைந்த பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, உள்ளிட்டோர் வந்து தலைவர் பதவிக்கு வாதம் நடத்தினார்கள்.

இறுதியில் ஒரு முடிவுக்கு வந்து விஜய் வர்மாவிற்கு தலைவர் என்ற பதவி கிடைத்தது. பின்னர் எந்த ஒரு வாக்கு வாதமும் இல்லாமல் அமைதியாக போட்டியாளர்கள் அனைவரும் தூங்கினார்கள்.

காலையில் எழுந்ததும் எப்பொழுதும் போட்டியாளர்களை தூக்கத்தில் எழுபவதற்கு  பாடல்கள் இசைக்கப்படும். அந்த வகையில், முதல் நாளான இன்று காலையில் லியோ படத்தின் நா ரெடி தான் பாடல் இசைக்க, போட்டியாளர்கள் அனைவரும் குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர். ‘

தற்பொழுது, பிக் பாஸ் வீட்டின் முதல் வாரமும் முதல் நாளும்ஆனா நிலையில், நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், வீட்டின் இந்த வார தலைவர் விஜய் வர்மாவை கவராமல் இருந்த 6 போட்டியாளர்களை மற்றொரு வீட்டில் அடைத்தனர்.

அந்த வீட்டில் இருந்து வெளியே வர கூடாது, இரண்டாவது வீட்டிற்குள் அனுப்பட்டுள்ள 6 போட்டியாளர்களிடம் பேச  மாட்டார் என்றும் பிக் பாஸ் தெரிவித்துள்ளார். போட்டி தொடங்கிய முதல் நாளே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ…

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்