பிக் பாஸ் சீசன் 8 : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள். நிகழ்ச்சியில் நடைபெறும் சம்பவங்கள் எல்லாம் சுவாரசியமாக இருக்கும் காரணத்தால் இந்த நிகழ்ச்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி பார்ப்பது உண்டு. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 7 சீசன் முடிந்து இருக்கிறது.
கடைசியாக நடைபெற்ற 7 -வது சீசன் நிகழ்ச்சியில் விஜே அர்ச்சனா டைட்டிலை தட்டிச்சென்றார். இந்நிலையில், 7-வது சீசன் வெற்றிகரமாக முடிந்து இருக்கும் நிலையில், அடுத்ததாக 8-வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து இருந்தார்கள். இதனையடுத்து, 8-வது சீசன் எப்போது தொடங்கும் என்பதற்கான தகவல் கசிந்து இருக்கிறது.
அதன்படி, பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதமே தொடங்கலாம் என தகவல்கள் கிடைத்துள்ளது. தற்போது அதற்கான பேச்சுவார்த்தை தான் மும்மரமாக நடைபெற்று கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரபலங்கள் யாரெல்லாம் தேர்வு செய்யலாம் என்பதற்கான வேலைகளும் மும்மரமாக போய்க்கொண்டு இருக்கிறதாம்.
அதைப்போல, வழக்கத்தை விட இந்த முறை பிரபல நடிகர் ஒருவரும் பிரபல நடிகை ஒருவரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வழக்கம் போலவே, இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். விரைவில் பிக்பாஸ் சீசன் 8 பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியான…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை…
வாஷிங்டன் : உலகின் மிகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான…
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…