பிக் பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன்! மற்றவர்களுக்கு என்னென்ன விருதுகள் தெரியுமா?
பிக் பாஸ் சீசன் 8 வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வானார். தீபக், ராணவ், ராயன், ஜாக்குலின், மஞ்சரி, ஆனந்தி ஆகியோருக்கு மட்டும் விருதுகள் வழங்கப்பட்டது.
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ் 8வது சீசன் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கியது. 7 சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த போட்டியை இந்த முறை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். மொத்தம் 106 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிகள் நேற்று (ஜனவரி 19) நிறைவடைந்தது.
மொத்தம் 24 பேர் கலந்து கொண்ட இந்த போட்டியில் முத்துக்குமரன், ராயன், பவித்ரா, விஷால், சவுந்தர்யா ஆகிய 5 பேர் இறுதி போட்டியாளர்களாக தேர்வாகினர். இறுதியில் பிக் பாஸ் சீசன் 8-ன் வெற்றியாளராக முத்துக்குமரன் அறிவிக்கப்பட்டார். 2வது இடத்துக்கான வெற்றியாளராக சவுந்தர்யா தேர்வானார். 3வது இடத்தில விஷாலும், 4வது இடத்தில் பவித்ராவும், 5வது இடத்தில் ராயனும் தேர்வாகினர்.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 8-ல் சிறப்பாக விளையாடிய மற்ற போட்டியாளர்களுக்கு விருதும் வழங்கப்பட்டது. அதன்படி, இந்த சீசனில் சிறப்பாக கேப்டன் பொறுப்பை வழிநடத்தியாக கேப்டன் ஆஃப் தி சீசன் எனும் விருது தீபக்கிற்கு வழங்கப்பட்டது. எந்த இடத்தில் பேச வேண்டும் என சரியாக பேசி விளையாடிய ஆனந்திக்கு மாஸ்டர் ஸ்ட்ராடஜிக் விருது வழங்கப்பட்டது.
வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்து சிறப்பாக விளையாடிய மஞ்சரிக்கு கேம் சேஞ்சர் விருது வழங்கப்பட்டது. அட்டென்ஷன் சீக்கர எனும் விருது ராணவ்-விற்கு வழங்கப்பட்டது. இறுதி போட்டி வரை முன்னேறிய ஜாக்குலினுக்கு சூப்பர் ஸ்ட்ராங்க் விருது வழங்கப்பட்டது. அதே போல இறுதி போட்டியில் 5வது இடம் பிடித்த ராயனுக்கு டாஸ்க் பீஸ்ட் விருது வழங்கப்பட்டது.