பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக குறைவான ஓட்டுக்களை பெற்று ஒரு போட்டியாளர் வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 7
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி தொடங்கி 1 வாரம் ஆகப்போகிறது. வழக்கமாக இல்லாத சீசனை போல இந்த சீசன் மிகவும் அமைதியாக இருக்கிறது.
கலந்து கொண்டவர்கள்
நடிகை வினுஷா தேவி, நடிகை விசித்ரா,ஜோவிகா, நடிகர் பிரதீப் ஆண்டனி, கூல் சுரேஷ்மணி சந்திரா, விஜய் வர்மா, பூர்ணிமா ரவி , நிக்சன், நடிகை அக்ஷயா உதயகுமார், ஐஷு, அனன்யா ராவ், நடிகர் சரவணா, சீரியல் நடிகை ரவீனா தாஹா, எழுத்தாளர் பவா செல்லதுரை, நடிகை மாயா கிருஷ்ணன், சீரியல் நடிகர் விஷ்ணு, பாடகர் யுகேந்திரன், உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
முதல் வாரமே எலிமினேஷன்
வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே 2 வாரங்கள் அல்லது 1 வாரம் கழித்து தான் எலிமினேஷன் நடக்கும் ஆனால், இந்த முறை முதல் வாரத்திலேயே எலிமினேஷன் வைத்து ஒருவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து பிக் பாஸ் வீட்டிற்குள் நாமினேஷனும் நடைபெற்றது.
நாமினேட் ஆனவர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த முதல் வாரத்திலேயே அனன்யா ராவ், பவா செல்லதுரை, ரவீனா, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, ஜோவிகா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டார்கள். இவர்களில் யார் குறைவான வாக்கு பெறுகிறார்களோ அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
வெளியேறிய போட்டியாளர்
இந்த வாரத்திற்கான எலிமினேஷன் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில், முதல் வாரத்தில் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, பாடகர் யுகேந்திரன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை கமல்ஹாசன் இன்று நடைபெறும் எபிஷோடில் தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…