பிக் பாஸ் சீசன் 18 : அடிதடி வரை சென்ற போட்டியாளர்கள்! பரபரக்கும் பிக்பாஸ் வீடு!

ஹிந்தி பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் அடிதடி அளவுக்கு சண்டை நடந்துள்ள காரணத்தால் ஒரு போட்டியாளர் வெளியேற்ற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

bigg boss 18 fight

மும்பை : தமிழை போலவே ஹிந்தியிலும் பிக் பாஸ் சீசன் 18 நிகழ்ச்சி மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டை இல்லாமல் இருக்குமா என்ன? சண்டைகள் வந்தாதானே அது பிக் பாஸ் வீடு. அப்படி பரபரப்பான சம்பவங்கள் எதாவது நடந்தால் தான் பார்வையாளர்களுக்கும் ஒரு விறு விறுப்பாக இருக்கும்.

எனவே, பரபரப்பை அதிகமாக்கி டி.ஆர்.பி யை எகிற வைக்க ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரிய சண்டை ஒன்று ஏற்பட்டு இருக்கிறது. சண்டை வாக்கு வாதத்தில் நின்றாள் பரவாயில்லை ஆனால், கைகலப்பு வரை சென்ற காரணத்தால் ஹிந்தி பிக் பாஸ் சீசனே பரபரப்பாகி இருக்கிறது. சண்டை எதற்காக எப்படி ஏற்பட்டது என்பதை பற்றி பார்ப்போம்.

முதலில் பிஸ்கட் டாஸ்க் முடிந்த பிறகு திக்விஜய் மற்றும் ஈஷா இடையே வாய்த் தகராறு ஏற்பட்டதால் தான் பிரச்சினையை தொடங்கியது. திக்விஜய் வென்ற பிஸ்கட்டை ஈஷா எடுக்க முயன்றதாகவும், இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிஸ்கட்டை நீங்கள் பிடிப்பதற்கு முன் என்னிடம் நீங்கள் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்று திக்விஜய் வலியுறுத்தினார். இதனால் இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது மாறி மாறி மோசமான வார்த்தைகளை திட்டி தீர்த்தனர். உடனடியாக இஷாவுக்கு ஆதரவாக களத்தில் குதித்த அவினாஷ் திக்விஜய்யிடம் பெண்களிடம் எப்படி பேசவேண்டும் தெரியாதா? என்பது போல பேசினார்.

இதனால் இருவருக்கும் இடையே கடுமையான  வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டபோது ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குவாதம் முற்றி அவினாஷ் மிஸ்ரா, திக்விஜய்யின் டி-ஷர்ட்டை பிடித்து தள்ளினார். மற்ற போட்டியாளர்கள் அவர்களை சமாதானம் செய்ய முயற்சி செய்தார்கள்.

அப்போது, இந்த சண்டையின் போது திக்விஜய் ரதி மற்றும் ரஜத் தலாலுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது இன்னும் குழப்படைய செய்தது. ஏற்கனவே, இருவருக்கும் வீட்டில் ஆகவே ஆகாது. எனவே, பல முறை இருவரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அதைப்போல, இந்த சண்டையின்போதும்  அவர்களும் சண்டைக்கு முந்திக்கொண்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

கடுமையான மோதலுக்குப் பிறகு, திக்விஜய் ரதி, ரஜத் தலால் மற்றும் அவினாஷ் இடையே கடுமையான மோதலுக்கு பின் பிக் பாஸ் ஹவுஸ்மேட்களுக்கு இந்த வாரம் இவர்களில் வீட்டை விட்டு யாரையாவது வெளியேற்ற வாக்கு செய்யுங்கள் என  வாக்களிக்கும் பணியை வழங்கினார்.

அதில் ரஜத் தான் அதிக வாக்குகளைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.  இறுதி முடிவு இப்போது தொகுப்பாளர் சல்மான் கானிடம் உள்ளது. இந்த வாரம் அவர் வெளியேறுவாரா அல்லது அவருக்கு மறு வாய்ப்பு வழங்கப்படுமா?  என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்