Categories: சினிமா

முதல் நாளே மிரள வைத்த பிக் பாஸ்.. நடு இரவில் அலறிய ரச்சித்தா.!

Published by
பால முருகன்

பிக் பாஸ் 6-ஆவது சீசன் தமிழ் நிகழ்ச்சில் நேற்று பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இந்தப் புதிய சீசனில் 20 பேர் பங்கேற்றனர். பிக் பாஸ் கொடுத்த நேற்று டாஸ்கின் விதிமுறையின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட குயின்ஸி, ஜனனி, நிவா, விக்ரமன் ஆகிய 4 பேரும் வீட்டிற்கு வெளியே உறங்கினார்கள்.

வெளியே மிகவும் கொசு கடித்து கொண்டிருந்ததால், இரவு முழுவதும் தூங்காமல், எப்போது விடியும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்கள் எதைப்பற்றியும் யோசிக்காமல் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தார்கள்.

இதையும் படியுங்களேன்- 4 நாளுக்கு ஒரு தடவை தான் பண்ணுவேன்… ரகசியத்தை உளறிக்கொட்டிய சீரியல் நடிகை.!

அதில் ரச்சித்தா மகாலட்சுமி மட்டும் சீக்கிரமாகவே எழுந்துவிட்டார். இதனை வெளியே உறங்கிக்கொண்டிருந்த குயின்ஸி, ஜனனி, நிவா, விக்ரமன் ஆகிய 4 பேரும் பார்த்து ரச்சித்தாவிடம் எதற்காக இவ்வளவு சீக்கிரம் எழுந்துவீட்டீர்கள் என்று கேள்வி கேட்க, தூங்கும்போது சத்தம் கேட்பது போல இருக்கிறது. என்னால் சரியாக தூங்கமுடியவில்லை என்று சோகத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய ரச்சித்தா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஜி.பி. முத்து அண்ணா சிரித்துக்கொண்டிருந்தது போல சத்தம் கேட்டது. எழுந்து பார்த்தேன் ஆனால், அவர் நன்றாக தூங்கி கொண்டிருந்தார்.இதனால் தான் என்னால் நன்றாக தூங்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

கடந்த சீசனிலிருந்தே பிக் பாஸ் வீட்டில் அமானுஷ்யம் இருக்கிறது என்று ஊடகங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில், ரச்சிதா இப்படி கூறியுள்ளது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரச்சிதா இப்படி கூறியவுடன் குயின்ஸி, ஜனனி, நிவா, மற்றும் விக்ரமன் ஆகியோர் சற்று ஷாக்காகியுள்ளனர்.

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

7 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

7 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

9 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

9 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

12 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

12 hours ago