தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அருவி, வாழ்த்து மற்றும் டாடா ஆகிய படங்களில் நடித்த நடிகர் பிரதீப் ஆண்டனி, கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இதனையடுத்து, ரூல்ஸை முறையாக கடைபிடித்து இந்த விளையாட்டை சுவாரஸ்யமாக விளையாடிய அவர், போட்டியில் இருந்து நீக்கப்பட்டது வருத்தமளிப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில், இதற்காக பிரதீப் விளக்கம் கேட்கலாம் என்றும், அவரை வெளியேற்றியது நியாயமில்லை என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கமல்ஹாசனின் 69வது பிறந்தநாளையொட்டி, பிக்பாஸ் வீட்டிலிருந்து சமீபத்தில் ரெட் கார்டு மூலம் அனுப்பப்பட்ட பிரதீப் ஆண்டனி நூதன முறையில் வாழ்த்து கூறியுள்ளார். ஏற்கெனவே, பிரதீப்பின் வெளியேற்றம் விமர்சனங்களுக்கு ஆளான நிலையில், அவது X பதிவு விவாதத்தை கிளப்பியுள்ளது.
இது குறித்து நடிகரும் நடப்பு பிக் பாஸ் போட்டியாளருமான பிரதீப் ஆண்டனி தனது X தள பக்கத்தில், சத்தியமா சொல்கிறேன் கமலின் மிகப்பெரிய ரசிகன் எனக் கூறியுள்ள அவர், நல்லா இருங்க, தீர விசாரிப்பதே மெய் என்ற ஹேஸ்டேக்குடன் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
மேலும், அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், வசூல் ராஜா MBBS படத்தில் கமல் பேசும் ஒரு வசனத்தை, பிரதீப் தனக்கு சாதகமாக பயன்படுத்தி இந்த பதிவை பதிவிட்டுள்ளார். தற்போது, இந்த பதிவு இணையத்தில் விவாதமாக மாறியுள்ளது. உலக நாயகன் கமலை எப்படி மறைமுகமாக பேசலாம் என கமல் ரசிங்கர்கள் கொந்தளித்துள்ளனர்.
பிரதீப் ஆண்டனி தன்னுடைய சக போட்டியாளர்களுடன் நடந்து கொண்ட விதம் மற்றும் தொடர்ச்சியாக சில தேவையில்லாத வார்த்தைகளை அவர் பயன்படுத்தி வந்த காரணத்தால் அவர் மீது போட்டியாளர்கள் குற்றம் சாட்டி வந்தார்கள்.
இதனையடுத்து, பிக் பாஸ் அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வீட்டை விட்டு வெளியே அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருந்தாலும், இந்த சீசனில் ஒரு வலுவான போட்டியாளராக பல ரசிகர்களை பெற்று கொண்ட பிரதீப் ஆண்டனி இந்த நிகழ்ச்சியை விட்டு பாதியிலே வெளியேறுள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.
இதற்கிடையில், பிரதீப் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்க வாய்ப்பு இருப்பதாக சிலர் கூறினாலும், அதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பலர் ஒட்டுமொத்த டைட்டில் வின்னர் ஆக தகுதியான ஒரு போட்டியாளரை அநியாயமாக வெளியேற்றியுள்ளனர் என்றெல்லாம் கருத்துக்கள் கூறி வருகின்றனர்.
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…