பிக் பாஸ்-இல் பட சான்ஸ் கேட்ட ஐசரி கணேசன்.! நெத்தியடி பதிலை கூறிய உலகநாயகன்.!
நேற்று நடத்த பிக் பாஸ் நிகழ்ச்சில் வருணின் உறவினரும் தயரிப்பாளருமான ஐசரி கணேசன் உலகநாயகனிடம் படம் தயாரிக்க சான்ஸ் கேட்டு இருப்பார். அதற்கு கமல் தனக்கே உரித்தான பாணியில் பதில் கூறி அசத்திவிட்டார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 5வது சீசன் வரை வந்துவிட்டது. 5வது சீசன் இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார்.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். அக்சரா மற்றும் வருண் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். வருண், தயாரிப்பாளர் ஐசரி கணேசனின் உறவினர் என்பதால், அவரும் நேற்று நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
அப்போது பிக் பாஸ் மேடையில் கமல்ஹாசனுடன் ஐசரி கணேசன், வருண் ஆகியோர் நின்று பேசிக்கொண்டிருக்கையில், ஐசரி கணேசன், தற்போது தான் உங்களை பார்க்க முடிந்தது. சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆதலால், எங்களது பட நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்து தர வேண்டும். அதில், நானும், வருணும் சிறு வேடத்திலாவது நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதனை பொது மேடையில் கேட்டுவிட்டதால், புன்னகையை பரிசாக அளித்து உலகநாயகனுக்கே உரித்தான பாணியில் பதிலை கூறிவிட்டார். படம் செய்யலாம் அது ராஜ் கமலாக இருந்தால் என்ன, வேல்ஸ் பிலிம்ஸ்-ஆக இருந்தால் என்ன, பிக் பாஸ் உங்களுக்கு மட்டுமல்ல (போட்டியாளர்களை பார்த்து ) எனக்கும் வாய்ப்பு வாங்கி தந்துவிட்டது. என பேசிவிட்டு சென்றார்.