பிக் பாஸ் சீசனில் இதுவரை இல்லாத சாதனை.! அசத்திய அர்ச்சனா.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்தண்டு ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 106 நாட்களின் பயணத்திற்கு பிறகு இன்று இறுதி கட்டத்தை எட்டடி இருக்கிறது. யார் அந்த டைட்டில் வின்னராக மாற போகிறார்கள் என்று ஆவலுடன் பிக் பாஸ் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

கமல் சார் ரசிகர்கள் மன்னிச்சிடுங்க! வீடியோ வெளியிட்ட புகழ்- குரேஷி!

தற்போது, பிக் பாஸ் சீசன் 7 டைட்டின் இறுதி வெற்றியாளர்  அர்ச்சனா தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.  அர்ச்சனா வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தவர் ஆவார். இவர் தான் இம்முறை பிக் பாஸ் கோப்பையை வென்றுள்ளார் என பல்வேறு தகவல்கள் சமூக வலை தளங்களில் கசிந்து கொண்டு இருக்கிறது. ஆனால் இன்னும் அதிகார பூர்வமாக எந்த ஒரு  தகவலும் வெளிவரவில்லை.

இதுவரை ஒளிபரப்பான 6 சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக  களமிறங்கிய ஒரு போட்டியாளர் வெற்றிவாகை சூடியதில்ல்லை. அந்த சாதனையை அர்ச்சனா படைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. நேற்று பிக் பாஸ் ஷூட்டிங் இறுதி விழா முடிந்து இருந்தாலும், இன்று இரவு தான் அதிகாரபூர்வமாக இந்த தகவல் வெளியாகும்.

இப்படி செய்திகள் வெளியான அதே நேரத்தில், பிக் பாஸ் போட்டியில் கலந்துகொண்ட பிரதீப் ஆன்டனி தான் உண்மையான பிக் பாஸ் வெற்றியாளர் என சமூக வலைத்தளத்தில்  பிரதீப் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இவர் பாதியிலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவர் ஆவர். இவர் தான் இந்த 7-வது  தொடருக்கான வெற்றியாளர் ஏனென்றால் இவர் தான் மக்கள் மனதை வென்ற உண்மையான வெற்றியாளர்  என பிக் பாஸ் பிரதீப் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Vijay -Parandur -Airport
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay