பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சி பல கட்ட திருப்பங்களுடன் விறு விறுப்பாக போய்க்கொண்டு இருக்கும் நிலையில், இந்த சீசன் போட்டியாளர்கள் விளையாடும் விதம் குறித்து இதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய பிரபலங்கள் பேசி வருகிறார்கள். குறிப்பாக வனிதா, சனம் ஷெட்டி, கஸ்தூரி என பிரபலங்கள் பேசி வருகிறார்கள்.
அந்த வகையில், ஆயிஷா சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த சீசன் போட்டியாளரராக கலந்து கொண்டிருக்கும் அவருடைய நண்பர் விஸ்ணு பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய ஆயிஷா ” விஸ்ணு காஜி பையன் இல்லை அவன் சின்ன பயனும் இல்லை. அவனோட குணமே ரொம்ப வேறு மாதிரி இருக்கும். அவன் யாரையாவது காதலிக்கிறான் என்றால் அதனை வெளியே எல்லாம் சொல்லி கொள்ளமாட்டான். அவன் 20 வயது சின்ன பையன் இல்லை, அவர் யாரையும் காதலிக்கவில்லை அவர் சிங்கிள்.
பிரதீப்பிற்கு ‘ரெட் கார்டு’ கொடுத்தது தப்பு! மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் பிரபலம் ஐஷு!
பிக் பாஸ் வீட்டிற்குள் அத்தனை கேமராக்கள் இருக்கிறது. அதற்கு முன்பு எப்படி காதலித்தால் வெளிப்படையாக சொல்வான்? அவன் அப்படி சொல்லும் குணம் கொண்டவனே கிடையாது. யாரையாவது காதலிக்கிறான் என்றால் கூட அந்த பெண்ணிடம் கூட சொல்லமாட்டான். எனவே, அவனை தப்பாக சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். நீங்கள் இதனை இப்படி கூட எடுத்துக்கொள்ளலாம்.
எப்படி என்றால் கேமரா முன்னாடி அவன் எதுவும் செய்யமாட்டான். ஒரு பெண் எப்படி தனது மரியாதைக்கு மற்றும் குணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பாளோ அதைப்போல ஆண்கள் வெர்சனில் விஸ்ணு” எனவும் ஆயிஷா தெரிவித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 7 -ல் பூர்ணிமா நீங்கள் இப்படி எல்லாம் பேசுவது எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. நான் வெளிப்படையாகவே சொல்கிறேன் எனக்கு உணர்வு இருக்கிறது. உங்கள எனக்கு பிடித்திருக்கிறது.
நான் என்னுடைய மனதில் படும் விஷயங்கள் அனைத்தையும் உங்களிடம் சொல்கிறேன் இல்லை என்றால் அது இல்லை என்று நீங்களே சொல்லிவிடுங்கள். பிடிக்கவில்லை என்றாலும் என்னிடம் சொல்லிவிடுங்கள்” ” என விஸ்ணுவிடம் கூறினார். அவர் இப்படி பேசியதற்கு தான் ஆயிஷா இத்தகைய விளக்கத்தை கொடுத்துள்ளார். மேலும், ஆயிஷா விஸ்ணுவுடன் சத்யா சீரியலில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…
சென்னை : தென் தமிழகத்தில் முதல் 'மினி டைடல் பார்க்'-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து…