“பிக் பாஸ் போனா டைவர்ஸ் தான்”…வெங்கடேஷ் பட்டை எச்சரித்த மனைவி!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றால் தன்னுடைய மனைவி தன்னை விவாகரத்து செய்துவிடுவதாக எச்சரித்ததாக செஃப் வெங்கடேஷ் பட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, ஒரு சில பிரபலங்கள் விரும்பினாலும், ஒரு சில பிரபலங்கள் அதனை அலர்ஜியாகவே பார்க்கிறார்கள். ஏனென்றால், நிகழ்ச்சியில் தங்களுடைய வீட்டில் எப்படி இருக்கிறார்களோ அப்படியே தான் இருக்கவேண்டும். அது நிகழ்ச்சியின் விதிமுறை இல்லை என்றாலும், நிகழ்ச்சியில், கலந்துகொள்பவர்கள் அப்படியே மாறிவிடுவார்கள்.
அவர்கள் என்னென்ன செய்கிறார்கள்? என்னென்ன விஷயங்களுக்கு எப்படி நடந்துகொள்கிறார்கள்? என அனைத்தும் அப்படியே மக்களுக்கு, கேமராக்கள் மூலம் காண்பிக்கப்படும். இதன் காரணமாக, அவர்களுக்கு ஏற்கனவே, இருக்கும் இமேஜ் கெட்டுப்போவதற்கான வாய்ப்பாகவும் அமைந்து விடுகிறது. இதனாலே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சில பிரபலங்கள் விரும்புவது இல்லை.
அப்படி தான், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது டாப்பு குக் டூப் குக் நிகழ்ச்சியில் கலக்கிக் கொண்டு இருக்கும் வெங்கடேஷ் பட் கூட, தனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் செல்ல விருப்பம் இல்லை என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வரும், அக்டோபர் 6-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.
இதன் காரணமாகத் தான், பல பிரபலங்களிடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது பற்றி கருத்துக் கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டி கொடுக்க வெங்கடேஷ் பட் கலந்துகொண்டபோது அவரிடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதில் கூறிய அவர் ” பிக் பாஸ் நிகழ்ச்சியை இதுவரை தான் பார்த்தது இல்லை எனவும், கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது மட்டும் தெரியும்” எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் ” தனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு வந்தால் கலந்துகொள்ள மாட்டேன். அப்படிக் கலந்துகொண்டால் தன்னை தவறாகக் காண்பிப்பார்கள்…இதனால் என்னுடைய மனைவி என்னை விவாகரத்து செய்துவிடுவேன் என எச்சரித்தார்” எனவும் வெங்கடேஷ் பட் கலகலப்பாகத் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…
March 29, 2025
தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?
March 29, 2025