ஜப்பான் பட தோல்விக்கு கார்த்தி தான் காரணம்… பிக் பாஸ் பாவா ஓபன் டாக்.!

Bava Chelladurai

Japan: கடந்தாண்டு தீபாவளிக்கு நடிகர் கார்த்தியின் 25வது படமாக பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்த நிலையில், குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜுமுருகன் தான் ஜப்பான் படத்தையும் இயக்கியிருந்தார். ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்த இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்திருந்தார்.

Read More – விஜயகாந்தை பார்த்தாலே பயப்பட காரணம் என்ன? பொன்னம்பலம் பதில்!

எனவே, ஜப்பான் படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், படு தோல்வியை சந்தித்தது. அதுவும், தொடர் வெற்றி படங்களை கண்டு வந்த நடிகர் கார்த்தியின் கெரியரில், மிகப்பெரிய தோல்வி படமாக ஜப்பான் அமைந்திருந்தது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் கூறியதாவது, படத்தின் மேக்கிங்கும், திரைக்கதையும் சுத்தமாக நல்ல இல்லை, இது இது ராஜுமுருகன் படமா என்று சந்தேகப்படும் அளவுக்கு இருக்கிறது.

Read More – எம்.ஜி.ஆர் எண்ணலாம் பண்ணாரு தெரியுமா? இறந்த பின்னும் அதை காட்டல…சுவாரஸ்ய சீக்ரெட்.!

டார்க் ஹியூமர் என்ற பெயரில் சொதப்பி விட்டார்கள் என பல்வேறு விமர்சனங்களை ஓப்பனாக எடுத்து வைத்தனர். இந்த நிலையில், ஜப்பான் படம் தோல்வி குறித்து எழுத்தாளர் பவா செல்லதுரை, ஓப்பனாக பேசியுள்ள சில விஷயம் புதிய பஞ்சாயத்தை கிளப்பியுள்ளது. அதாவது, ஜப்பான் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிக்பாஸ் பிரபலமும், எழுத்தாளருமான பவா செல்லதுரை பேட்டி ஒன்றில் அப்படம் தோல்வி குறித்து பேசியுள்ளார்.

அதில், அவர் கூறியதாவது, ஜப்பான்னு ஒரு படத்தில் நான் நடித்திருந்தேன். அந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. அது எனக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. ஏனென்றால், ராஜு முருகன், முருகேஷ் பாபு ஆகியோரெல்லாம் அதில் வேலை பார்த்தார்கள். இந்த ஜப்பான் படம் பிரமாதமாக வந்திருக்க வேண்டிய ஒரு டார்க் ஹியூமர் உள்ள படம். ஆனால், அந்த படம் அப்படி வரவில்லை. படத்தை பார்க்கும்போது ஹியூமர்னு நாம் நினைத்ததெல்லாம் சீரியஸ் ஆகிவிட்டது. இதனால் சரியாக போகவில்லை.

Read More – இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி பையன் யார் தெரியுமா? அச்சச்சோ இவரு பயங்கரமான ஆள் ஆச்சே!

ஹீரோலாம் இல்லாமல் அப்படத்தை முழுமையாக ராஜு முருகன், முருகேஷ் பாபு மாதிரியான நபர்களிடம் விட்டிருந்தால், அது ஒரு அழகான காமெடி படமாக வந்திருக்கும் என்று எனக்கு தோணுச்சு. அப்போ எல்லாருடைய தலையீடுகளும் தமிழ் சினிமாவில் உள்ளது. அதன்படி, படத்தின் ஹீரோ, அவருக்கு என்ன வேண்டும், கதையை எப்படி பண்ணனும்னு சொல்கிறார். இதுபோன்று தயாரிப்பாளர் அவர் பங்குங்கு ஒன்னு சொல்கிறார்.

அப்புறம் இசையமைப்பாளர்கள் சொல்வார்களா என்பது தெரியாது, ஆனால் எடிட்டர் சொல்வார்கள். இவ்வளவு பேர் சொல்வதால், அந்த கதையை எடுக்குற இயக்குநரும், கதை ஆசிரியரும் குழம்பி விடுகிறார்கள். ஹீரோ முதல் ஒவ்வொருவரையும் திருப்திபடுத்த வேண்டிய சூழல் இருப்பதால் இயக்குனருடைய கலை முற்றிலுமாக போய்விடுகிறது என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளது புதிய பஞ்சாயத்தை கிளப்பியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்