பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!
இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எலிமினேஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் தர்ஷா குப்தா, அர்னவ் இருவரும் குறைவான வாக்குகளை பெற்று டேஞ்சர் ஜோனில் உள்ளனர்.
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு செய்திகளில் இடம்பிடிப்பது வழக்கம் தான். ஆனால், இதுவரை நடந்து முடிந்த சீசன்களை தற்போது ஒளிபரப்பாகி வரும் 8 -வது சீசன் நிகழ்ச்சியை ஒப்பிட்டுப் பார்த்தால் 8-வது சீசனுக்கு மக்களிடையே குறைவான எதிர்பார்ப்பு தான் கிடைத்து வருகிறது.
வரவேற்புகள் ஒரு பக்கம் குறைவாக இருந்தாலும் கூட மற்றொரு பக்கம் விஜய் தொலைக்காட்சி டி.ஆர்.பி அதிகரிக்க ப்ரோமோக்களையும் வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் கூட குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியில் கலக்கிக் கொண்டு இருந்த தர்ஷா குப்தா பிக் பாஸ் நிகழ்ச்சியில் சரியாக சமைக்கவில்லை என சக போட்டியாளர்கள் அவரை அழ வைத்த ப்ரோமோவை வெளியீட்டு இருந்தது.
இருப்பினும், முந்திய சீசன்களுக்கு கிடைத்த வரவேற்பு இந்த சீசன் கிடைக்கவில்லை. நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் மட்டுமே ஆகியுள்ள காரணத்தால் வரும் வாரங்களில் வரவேற்பு அதிகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், வரவேற்பு கிடைத்தால் என்ன கிடைக்கவில்லை என்றால் என்ன என்கிற பாணியில் விஜய் டிவி நிர்வாகம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது வாரமே எலிமினேஷன் சுற்று வைத்து இருக்கிறது.
ஏற்கனவே, நிகழ்ச்சி தொடங்கி ஒரே நாளில் கலந்து கொண்ட சஞ்சனா வெளியேற்றப்பட்டு பிறகு மீண்டும் மறு வாய்ப்பு வழங்கப்பட்டு நிகழ்ச்சிக்குள் வந்தார். ஆனால், திரும்பவும் தற்போது இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறார். அவருடன் சேர்த்து 9-பேரும் எலிமினேஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் உள்ளனர்.
தர்ஷா குப்தா, ஜெஃப்ரி, தீபக்,சௌந்தர்யா, ஜாக்குலின், ரஞ்சித், சாச்சனா மற்றும் முத்துக்குமரன், அர்னவ், விஜே விஷால், உள்ளிட்ட 10 பேர் இடம்பெற்றுள்ளார்கள். இவர்களில் குறைவான வாக்குகளை யார் பெறுகிறார்களோ அவர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு முதல் ஆளாக வெளியேறுவார். நம்பத்தக்க சினிமா வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்களின் படி, இவர்களில் தர்ஷா குப்தா, அர்னவ் இருவரும் குறைவான வாக்குகளை பெற்று டேஞ்சர் ஜோனில் உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, இவர்கள் யார் ஒருவர் குறைவான வாக்குகளை பெருகிறாரோ அவர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு இந்த வாரம் எலிமினேஷன் ஆகி வீட்டுக்குத் திரும்புவார் எனக் கூறப்படுகிறது. யார் நிகழ்ச்சியை விட்டு வெளியேறப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.