பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி இன்று 5-வது நாள் ஆகி இருக்கும் நிலையில் மெல்ல மெல்ல சண்டை வெடிக்க தொடங்கி இருக்கிறது. ஆரம்பத்தில் பிரதீப் எல்லாரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில், விஷ்ணு தற்போது அடிக்கடி பலரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக, விஷ்ணு கடந்த சில நாட்களாகவே மாயாவுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவரை தொடர்ந்து தற்போது விஷ்ணுவுக்கும் பிக் பாஸ் கேப்டனாக இருக்கும் விஜய்க்கும் மிகப்பெரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்கு வாதம் நடந்த முழு காட்சி இன்றய எபிசோடில் தான் தெரிய வரும்.
இன்றய நாளுக்கான ப்ரோமோவில் அவர்கள் இருவரும் வாக்கு வாதத்தில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. அந்த ப்ரோமோவில் ” கேப்டனாக இருக்கும் விஜய் என் மீது பிரதீப் ஷூவை வைத்து என் மீது மோதிகொண்டு சென்றார். எனக்கு ஒரு சமயம் திடீரென கோபம் வந்துவிடும் அப்படி கோபம் வந்தால் என்னுடைய கையை தூக்கி அவருடைய முகத்தில் அடிப்பது போல கையை தூக்கி விடுவேன்.
பிறகு மூக்கு உடைந்து விடும் என் மீது மிகவும் பாசமான பசங்கள் எல்லாம் வெளியிலே இருக்கிறார்கள் எனவே, நீங்கள் இப்படி செய்து விட்டு வெளியே சென்றீர்கள் என்றால் அவ்வளவுதான் என்று விஜய் கூறியிருந்தார். அதற்கு பவா செல்லத்துரை விஜய் இப்படி சொன்னது சரிதான் என்று யாராவது சொல்ல சொல்லுங்கள் என்று கேட்கிறார்.
அதன் பின் எழுந்த விஷ்ணு நான் இப்போது உங்கள் மீது செருப்பை வைத்து தட்டுகிறேன் நீ முடிந்தால் என்னை அடி பார்ப்போம் என்று கூறுகிறார். அதற்கு விஜய் நீ முதலில் செருப்பால் தட்டு நான் அடிக்கிறேன் என்று கூறுகிறார். இந்த அதிரடி ப்ரோமோ இன்று நடைபெறவுள்ள எபிசோடின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிக மாகியுள்ளது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…