பிக் பாஸ் 7 : “உன்னால முடிஞ்சா என்ன அடி”! விஜய்யுடன் மோதும் விஷ்ணு!

Bigg Boss Tamil Season 7

பிக் பாஸ் சீசன் 7  நிகழ்ச்சி தொடங்கி இன்று 5-வது நாள் ஆகி இருக்கும் நிலையில் மெல்ல மெல்ல சண்டை வெடிக்க தொடங்கி இருக்கிறது. ஆரம்பத்தில் பிரதீப் எல்லாரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில், விஷ்ணு தற்போது அடிக்கடி பலரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

குறிப்பாக, விஷ்ணு கடந்த சில நாட்களாகவே மாயாவுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவரை தொடர்ந்து தற்போது விஷ்ணுவுக்கும் பிக் பாஸ் கேப்டனாக இருக்கும் விஜய்க்கும் மிகப்பெரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்கு வாதம் நடந்த முழு காட்சி இன்றய எபிசோடில் தான் தெரிய வரும்.

இன்றய நாளுக்கான ப்ரோமோவில் அவர்கள் இருவரும் வாக்கு வாதத்தில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. அந்த ப்ரோமோவில் ” கேப்டனாக இருக்கும் விஜய் என் மீது பிரதீப் ஷூவை  வைத்து என் மீது மோதிகொண்டு சென்றார். எனக்கு ஒரு சமயம் திடீரென கோபம் வந்துவிடும் அப்படி கோபம் வந்தால் என்னுடைய கையை தூக்கி அவருடைய முகத்தில் அடிப்பது போல கையை தூக்கி விடுவேன்.

பிறகு மூக்கு உடைந்து விடும் என் மீது மிகவும் பாசமான பசங்கள் எல்லாம் வெளியிலே இருக்கிறார்கள் எனவே, நீங்கள் இப்படி செய்து விட்டு வெளியே சென்றீர்கள் என்றால் அவ்வளவுதான் என்று விஜய் கூறியிருந்தார். அதற்கு பவா செல்லத்துரை விஜய் இப்படி சொன்னது சரிதான் என்று யாராவது சொல்ல சொல்லுங்கள் என்று கேட்கிறார்.

அதன் பின் எழுந்த விஷ்ணு நான் இப்போது உங்கள் மீது செருப்பை வைத்து தட்டுகிறேன் நீ முடிந்தால் என்னை அடி பார்ப்போம் என்று கூறுகிறார். அதற்கு விஜய் நீ முதலில் செருப்பால் தட்டு நான் அடிக்கிறேன் என்று கூறுகிறார். இந்த அதிரடி ப்ரோமோ இன்று நடைபெறவுள்ள எபிசோடின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிக மாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்