Bigg Boss Tamil Season 7 maya [File Image]
பிக் பாஸ் 7 சீசன் நிகழ்ச்சி விறு விறுப்பாக போய் கொண்டிருக்கும் நிலையில், கடந்த வாரம் எலிமினேஷன் இல்லாத காரணத்தால் பிக் பாஸ் போட்டியாளர்கள் உற்சாகத்தில் இருந்தனர். எலிமினேஷன் இல்லாத காரணம் என்னவென்றால், இந்த சீசன் முதல் வாரத்தில் அனன்யா வீட்டை விட்டு வெளியேறினார். அதற்கு அடுத்த வாரமே தனிப்பட்ட காரணத்துக்காக எழுத்தாளர் பவா செல்லத்துரை வெளியேறினார்.
எனவே, பவா செல்லத்துரை வெளியேறிய காரணத்தால் இந்த வாரம் யாரும் வெளிய போகக்கூடாது போனால் ஒரு போட்டியாளர் குறைந்தது போல ஆகிவிடும் எனவே அடுத்த வாரம் எலிமினேஷனை வைத்து கொள்ளலாம் என திட்டமிட்டு இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என விஜய் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
பிக் பாஸ் 7 : நீ வெளியே போனா நானும் போயிருவேன்! மாயா எடுத்த அதிரடி முடிவு?
இருப்பினும் வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு கடந்த வாரம் நோ எலிமினேஷன் என்பது தெரியாது. இதனால் போட்டியாளர்கள் பயத்துடன் இருந்தார்கள். கமல்ஹாசனும் பயம்முறுத்தி கொண்டு பிறகு இறுதியில் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என கமல்ஹாசன் தெரிவிக்க போட்டியாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியானார்கள்.
ஆனால், இந்த வாரம் கண்டிப்பாக எலிமினேஷன் உண்டு எனவே, வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை ( இன்று) போட்டியாளர்கள் சக போட்டியாளர்களை நாமினேஷன் செய்யவேண்டும் அதில் தேர்ந்தெடுக்க பட்ட போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் வருவார்கள் அவர்களில் குறைவான வாக்கு பெற்றவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவார்.
இந்த நிலையில், மாயா மற்றும் பூர்ணா இருவரும் தற்போது தனியாக அமர்ந்துகொண்டு நாமினேஷன் லிஸ்டை தயார் செய்துள்ளனர். முதலில் மாயா இந்த வாரம் எல்லாரும் விஷ்னுவை நாமினேட் செய்வார்கள், எல்லாரிடமும் அவர் சண்டைபோட்டுள்ள காரணத்தால் அவரை எல்லாரும் நாமினேட் செய்ய வாய்ப்புள்ளது.
நான் ரவீனா, விசித்ராவை நாமினேட் செய்ய போகிறேன் என மாயா கூறுகிறார். அதற்கு பூர்ணிமா இந்த வாரம் பிரதீப் பெயர் நாமினேஷனில் இடம்பெறும் நான் விசித்ரா மற்றும் மணி இருவரையும் நாமினேட் செய்யப்போகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும், இந்த வாரம் யாரெல்லாம் நாமினேஷன் லிஸ்டில் இடம்பிடிக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…