பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்களை கடந்திருக்கும் நிலையில், அடிக்கடி சில சண்டைகள் நடைபெற்று அது பெரியதாக வெடிக்காமல் அமைதியாகவே முடிந்து விடுகிறது. மற்ற சீசன்கள் என்றாலே இந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தங்களுகுள்ளே சண்டைபோட்டு கொண்டு வாக்கு வாதத்தில் ஈடுபடுவார்கள்.
வழக்கமாக நடைபெறும் பிக் பாஸ் சீசனை விட இந்த சீசன் மிகவும் மொக்கையாக இருப்பதாக ரசிகர்கள் வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார்கள். அந்த அளவிற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த 7-வது சீசனில் எதுவுமே நடக்கவில்லை. மேலும், முதல் வாரமே பிக் பாஸ் வீட்டை விட்டு அனன்யா குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார்.
அவரை தொடர்ந்து அடுத்ததாக எழுத்தாளர் பவா செல்லத்துரை தன்னால் இனிமேல் ஒரு நாள் கூட இந்த வீட்டில் இருக்க முடியாது தன்னை இந்த வீட்டை விட்டு வெளியே விடுங்கள் என தெரிவித்திருந்தார். எனவே, உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பியது.
இந்த நிலையில், ஏற்கனவே, இந்த வாரம் வீட்டில் இருந்து பவா செல்லத்துரை வெளியேறியுள்ள காரணத்தால் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று விஜய் தொலைக்காட்சி அறிவித்து இருந்தது. ஆனால், இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பது வீட்டில் இருக்கும் போட்டியளர்களுக்கு தெரியாது. அவர்கள் இந்த வாரமும் எலிமினேஷன் இருப்பதாகவே நினைத்து வருகிறார்கள்.
இந்த வாரம் பிக் பாஸ் நாமினேஷனில் பிரதீப், மாயா, விஷ்ணு, அக்ஷயா, ஜோவிகா, விசித்ரா, பூர்ணிமா ஆகியோர் பெயர் இடம்பெற்று இருந்தது. இந்த நிலையில், இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மாயா பூர்ணிமா விடம் எலிமினேஷன் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார். பூர்ணா முதலில் எனக்கு எப்போதும் வீட்டை விட்டு போவேன் என்று தோனியது இல்லை இந்த முறை இது தான் என்னுடைய கடைசி வாரம் என்று தோணுவதாக கூறுகிறார்.
அதற்கு மாயா நீ இந்த வீட்டை விட்டு வெளியே சென்றால் நானும் சென்றுவிடுவேன் இவர்கள் கூட எல்லாம் நம்மளால இருக்கவே முடியாது என்று கூறுகிறார். மேலும் தொடர்ந்து பேசும் மாயா அடுத்த வாரம் ஐஷு மட்டும் கேப்டன் ஆகிவிட்டால் என்றால் ஜோவிகா மற்றும் யுகேந்திரன், ஆகிய இரண்டு பேரையும் வச்சு செய்ய போறார் என்று கூறுகிறார்” இத்துடன் ப்ரோமோவும் முடிகிறது.
எனவே, என்னவெல்லாம் மாயா பூர்ணாவிடம் பேசினார் என்பதற்கான முழு விவரம் இன்று நடைபெறும் எபிசோடில் தான் தெரிய வரும். மேலும், இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பதை கமல்ஹாசன் போட்டியாளர்களுக்கு பயத்தை கொடுத்துவிட்டு தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : அமரன் திரைப்படம் கொடுத்த ஒரே வெற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை பான் இந்திய அளவுக்கு கொண்டு சென்றது என்றே…
நேபாளம் : நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று ஜனவரி 7, 2025 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக…
ஒட்டாவோ : கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வேதனையுடன் அறிவித்துள்ளார்.…
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்…
இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற நிலையில், ஆளுநர் கலந்துகொண்டு உரையாற்றுவார் என கூறப்பட்டது. ஆனால்,…
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…