சினிமா

Bigg Boss 7 Exclusive: பவா செல்லத்துரையால் போட்டியாளர்களுக்கு குஷி…இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது!

Published by
பால முருகன்

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில், போட்டி கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. அடிக்கடி பிக் பாஸ் வீட்டிற்குள் சண்டைகள் வந்தாலும் கூட மற்ற சீசன்களை ஒப்பிட்டு பார்க்கையில் இந்த சீசன் சண்டை கொஞ்சம் குறைவு தான். இந்நிலையில், வழக்கம் போல் வாரம் வாரம் ஒவ்வொரு போட்டியாளர் குறைவான மக்கள் வாக்குகளை பெற்று வீட்டில் இருந்து வெளியேறி வருகிறார்கள்.

அந்த வகையில், கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு அனன்யா குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார். அவருக்கு அடுத்த படியாக இந்த வாரம் திங்கட்கிழமை எழுத்தாளர் பவா செல்லத்துரையும் வெளியேறினார். அவர்களை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேற போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் கிடையாதாம். அதற்கு காரணம் பவா செல்லத்துரை தன்னால் இனிமேல் இந்த வீட்டிற்கு இருக்க முடியாது தனக்கு உடல் நிலை சரில்லை மன ரீதியாக 1 நாள் கூட என்னால் இருக்க முடியாது. என்னை தயவுசெய்து இந்த வீட்டில் இருந்து அனுப்பி வையுங்கள் என பிக் பாஸ் இடம் கேட்டிருந்தார்.

இதன் காரணமாக அவருக்கு உடல் நிலை சரியில்லை என்ற காரணத்தால் பிக் பாஸ் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் தான் வீட்டை விட்டு போகவேண்டும் என்ற விதிமுறை பிக் பாஸ் வீட்டிற்குள் உண்டு அதைப்போல, பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது வாரம் தான் ஆகிறது.

எனவே, ஏற்கனவே இரண்டு போட்டியாளர்கள் வீட்டை விட்டு கிளம்பி விட்டார்கள். இந்த வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறினால் வீட்டில் 15-பேர் ஆகிவிடுவார்கள் என்ற காரணத்துக்காக பிக் பாஸ் இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்ற முடிவை எடுத்துள்ளது. எனவே, அடுத்த வாரம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் நடைபெறும் ஒரு போட்டியாளர் வெளியே செல்வார்.

இந்த வாரம் கமல்ஹாசன் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த பஞ்சாயத்தை பற்றி பேசி பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அறிவுரை கொடுப்பார் என கூறப்படுகிறது. இந்த வாரம் நாமினேஷனில் பிரதீப், மாயா, விஷ்ணு, அக்‌ஷயா, ஜோவிகா, விசித்ரா, பூர்ணிமா ஆகியோர் இடம்பெற்று இருந்தார்கள். இவர்களில் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு மக்கள் வாக்களித்து வந்த நிலையில், இந்த வாரம் எலிமினேஷன் இல்லை.

எலிமினேஷன் இல்லாததை மக்களுக்கு விஜய் தொலைக்காட்சி அறிவித்துவிட்டது. ஆனால், பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு இது இன்னும் தெரியாது. எனவே, கமல்ஹாசன் அனைவர்க்கும் பயத்தை கொடுத்துவிட்டு கடைசியாக ஞாயிற்றுக்கிழமை இரவு நோ எலிமினேஷன் என்று சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!

ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…

58 minutes ago

விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!

சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…

58 minutes ago

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…

3 hours ago

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…

4 hours ago

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…

4 hours ago

பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…

5 hours ago