பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டைகள் மற்றும் எதாவது மக்களை கவர வைக்கும் வகையில் இருக்கும். ஆனால், தற்போது ஒளிபரப்பாகி வரும் 7-வது சீசன் பெரிதாக ரசிகர்களை ஈர்க்காமல் இருக்கிறது என்றே கூறலாம். அடிக்கடி வீட்டிற்குள் சண்டைகள் வந்தாலும் கூட வழக்கமாக இல்லாத சீசன் போல பெரிய அளவில் சண்டைகள் எதுவும் வராமல் சின்ன சின்ன சண்டைகள் வந்து அந்த நேரத்திலேயே முடிந்து விடுகிறது.
இதனால் போட்டியை பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த சீசன் சற்று போராகவும் அமைந்துள்ளது. ஆனால், மற்றபடி செட் அமைத்திருக்கும் விதம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் டாஸ்க்குகள் அனைத்தும் இதுவரை அல்லாத வகையில் சற்று வித்தியாசமாக இருக்கிறது. அதில் எந்த குறையும் சொல்ல முடியாது என்று கூறலாம்.
அந்த அளவிற்கு இந்த சீசன் இரண்டு வீடுகளாக பிரித்து இரண்டு வீடுகளிலும் மிகவும் அற்புதமாக பார்ப்பதற்கு பிரம்மாண்டமாகவும் விஜய் தொலைக்காட்சி அமைத்துக் கொடுத்துள்ளனர். இருந்தாலும் பெரிய அளவில் இந்த சீசன் மக்களை ஈர்க்கவில்லை. இந்த நிலையில் வழக்கம்போல வாரம் வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் நாமினேஷன் நடைபெற்றஎலிமினேஷன் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இதுவரை மூன்று போட்டியாளர்கள் வெளியேறி இருக்கும் நிலையில் இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற உள்ளார். அதுமட்டுமின்றி 29-ஆம் தேதி நடைபெற உள்ள எபிசோடில் வைல்ட்கார்ட் என்ட்ரி மூலம் ஐந்து போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இணையவுள்ளார்கள். வழக்கமாக வைல்ட் கார்ட் ஏனென்றால் ஒன்று அல்லது இரண்டு போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார்கள் .
ஆனால் இந்த முறை சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் ஐந்து போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளார்கள். இதனை கமல்ஹாசனே ப்ரோமோ ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய போகும் அந்த ஐந்து போட்டியாளர்கள் குறித்த விவரம் தற்போது கசிந்து உள்ளது.
அதன்படி, சத்யா, விஜே அர்ச்சனா, கானா பாலா, மாகாபா ஆனந்த், பப்லு பிரித்விராஜ், உள்ளிட்ட பிரபலங்கள் இந்த 7-வது சீசன் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உண்மையில் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்ற விவரம் வரும் 29-ஆம் தேதி தான் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…
சென்னை: தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
சென்னை: குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை…
நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் மற்றும் எத்தனை விளக்கு ஏற்றலாம் என்பதை காணலாம். சென்னை :நாம் இறைவனை வழிபடும்…
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…