பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் படத்தில் காதல் ஜோடிகளாக களமிறங்குகின்றனர்…!!!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் பிரபலமாகியுள்ளனர். பிக்பாஸ் முதல் சிஷனில் கலந்து கொண்ட ரைசா-ஹரிஷ் கல்யாண் ஆகியோர் ஒரு படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.
அதேபோல் பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டவர்களும் பிரபலமாகியுள்ளனர். இந்நிலையில் அந்நிகழ்ச்சியிலேயே மஹத்-யாஷிகா காதலிப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது இருவரும் ஒரு படத்தில் காதல் ஜோடிகளாக நடிக்கின்றனர். மேலும் யாஷிகா கூறுகையில் இருவரும் தற்போது நல்ல நண்பர்களாக இருப்பதாக கூறியுள்ளார்.