பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில், ஓவியா, ஜூலி, நமீதா, காயத்ரி, சினேகன், ஆரவ், சக்தி, ரைசா, கணேஷ், வையாபுரி, பரணி, கஞ்சா கருப்பு எனப் பலர் கலந்து கொண்டனர். 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில், தினம் தினம் பிக்பாஸ் சொல்லும் கட்டளைகளுக்கு ஏற்ப வேலை செய்வதும், பங்கேற்பாளர்களுக்கு இடையே போட்டிகள் நடத்தப்படுவதாகவும் இருக்கும். பங்கேற்பாளர்களுக்கிடையேயான உரையாடலில் நகைச்சுவை, கோபம், சண்டை, என்று வெளிப்படும் நவரசங்களும் ரசிகர்களை கவர்ந்தன. இதே போல் 2வது சீசனான பிக்பாஸ் 2 நிகழ்ச்சியும் புதிய பங்கேற்பாளரோடு ஜாலியாக இருக்கும் என்றே சொல்லலாம்.
நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது .இதனை தொடர்ந்து இதன் இரண்டாவது சீசன் தற்போது தொடங்கியுள்ளது .
இந்த சீசனின் முதல் போட்டியாளராக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் கதாநாயகி யாசிகா ஆனந்த் களமிறங்கியுள்ளார்.
அவரை தொடர்ந்து பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம், மங்காத்தா புகழ் மஹத், காமெடி நடிகர் டேனியல்,வைஷ்ணவி ,ஜனனி ,ஆனந்த் வைத்தியநாதன் , பாடகி ரம்யா, சென்றாயன், மெட்ராஸ் புகழ் ரித்விகா,கவர்ச்சி நாயகி மும்தாஜ்,கலக்கப்போவது யாரு புகழ் தாடி பாலாஜி, மமதி சாரி,கலக்கப்போவது யாரு புகழ் தாடி பாலாஜியின் மனைவி நித்யா, சாரிக் ஹாசன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்று வெளியிட்ட வீடியோ ஒன்றில் சண்டைபோடுவது போன்ற காட்சி வெளியாகியுள்ளது.இதனால் முதல் நாளே சண்டையுடன் பிக் பாஸ் 2 தொடங்கியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…