தெலுங்கில் பெரிய தயாரிப்பு நிறுவனங்களாக இருக்கும் 4 நிறுவனங்கள் அடுத்ததாக தமிழில் 4 பெரிய படங்களை தயாரிக்கவுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ்,டி வி வி மூவிஸ், ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம், ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் ஆகிய 4 நிறுவனங்கள் தான் அடுத்ததாக தமிழில் டாப் நடிகர்களாக இருக்கும் நடிகர்களின் படங்களை தயாரிக்கவுள்ளது. அது என்னென்ன படங்கள் என்பதனை பற்றி பார்க்கலாம்.
அஜித்தின் 63
நடிகர் அஜித் நடிக்கவுள்ள 63-வது திரைப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தினை இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே கூறலாம். இருப்பினும் இன்னும் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
தளபதி 69
விஜய் அடுத்ததாக தன்னுடைய 69-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அந்த திரைப்படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதாக ஒரு பேச்சு இருக்கிறது. இந்த திரைப்படத்தினை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான டி வி வி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
13ஆண்டுகளுக்கு முன் அரசியல் குறித்த கேள்விக்கு விஜய் சொன்ன பதில்?
தனுஷ் 51
தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் தன்னுடைய 51-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது.
சிவகார்த்திகேயன் 23
நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இந்த திரைப்படத்தினை எந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த திரைப்படத்தினை ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…