பிரமாண்ட வீடு…மிகப்பெரிய வசூல்…கொண்டாட்டத்தில் நடிகர் தனுஷ்.!
நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான “வாத்தி” திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாக படம் உலகம் முழுவதும் 90 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், வாத்தி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் சமீபத்தில் 150 கோடி மதிப்பில் உருவான பிரமாண்ட வீட்டை தன்னுடைய பெற்றோர்க்கு பரிசளித்து அவர்களை உற்சாகப்படுத்தி இருந்தார். தனுஷ் தனது பெற்றோருக்கு பரிசளித்த இந்த வீடு சென்னை போயஸ் கார்டனில் இருக்கிறது.
இந்நிலையில், தான் புது வீடு கட்டியுள்ள நல்ல நேரம் தான் படமும் வெற்றிபெற்று தன்னுடைய பெயர் கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது என்ற எண்ணத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாராம்.
மேலும் நடிகர் தனுஷ் வாத்தி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் அருண் மாதேஷ்வரண் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.