பிக்பாஸ் 4: நான் ஒருவன் மட்டும் தான் அழைக்கப்படாதவன்! – சுரேஷ் சக்கரவர்த்தி

சுரேஷ் சக்கரவர்த்தியிடம் நீங்கள் ஏன் பிக்பாஸ் வீட்டிற்கு வரவில்லை என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். நான் ஒருவன் மட்டும் தான் அழைக்கப்படாதவன் என்றும் பதிலளித்துள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த வாரம் இந்த நிகழ்ச்சி முடிவடைய உள்ள நிலையில், டைட்டிலை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. மேலும் ஆரி வெற்றியாளராக அதிக வாய்ப்புள்ளதாகவும் கணிப்புக்கள் கூறுகிறது.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் ஏற்கனவே வெளியேறிய, அர்ச்சனா, ரேகா, அறந்தாங்கி நிஷா, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட போட்டியாளர்கள் மீண்டும் வருகை புரிந்துள்ளனர். ஆனால், வேல்முருகன், சனம் செட்டி, அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி போன்றோர் ஏன் வரவில்லை என்ற கேள்வி எழுந்த நிலையில், வரும் நாட்களில் அவர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து, ட்வீட்டர் பக்கத்தில் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் நீங்கள் ஏன் பிக்பாஸ் வீட்டிற்கு வரவில்லை என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்த அவர் இதுவரை தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், நான் ஒருவன் மட்டும் தான் அழைக்கப்படாதவன் என்றும் பதிலளித்துள்ளார்.