Bhuvaneswari கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகை புவனேஸ்வரி. இவருடைய கண்கள் பார்ப்பதற்கு பூனைக்கண்கள் போல் இருப்பதால் அந்த சமயமே இவருக்கு பூனைக்கண்ணு புவனேஸ்வரி என்ற பெயரும் கிடைத்தது. இவர் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் தான் இவருக்கு ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது.
ஆனால் பாய்ஸ் படத்தில் நடிக்கவே முதலில் நடிகை புவனேஸ்வரி யோசித்தாராம். அந்த அளவிற்கு பயந்தாராம். ஏனென்றால் இந்த படத்திற்கு முன்பு அவர் பல கவர்ச்சியான படங்களில் நடித்திருக்கலாம் ஆனால் பாய்ஸ் படத்தின் இந்த கதாபாத்திரத்தை போல ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்ததே இல்லை. 5 பசங்க ஒரு ரூம் எப்படி சரியாக வரும் என இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்தால் மக்கள் நம்மளை எப்படி பார்ப்பார்கள் என யோசித்தாராம்.
ஆனால் இயக்குனர் ஷங்கர் ஐந்து பேரில் ஒருவரின் விரல் கூட உங்களுடைய மேல் படாது அந்த மாதிரி எந்த காட்சியும் படத்தில் இல்லை நீங்கள் தைரியமாக இந்த கதாபாத்திரத்தை செய்யுங்கள் கண்டிப்பாக உங்களுக்கு நல்ல ரீச் கிடைக்கும் என்று கூறினாராம். ஷங்கரே இப்படி கூறியவுடன் புவனேஸ்வரி இந்த கதாபாத்திரத்தில் நாம் நடிப்போம் என்று முடிவெடுத்தாராம். அதேபோலவே அந்த கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய அளவில் வெற்றிபெற்று மக்களுக்கு அவருடைய பெயரை தெரிய வைத்தது.
அது ஒரு புறம் இருந்தாலும், கதாபாத்திரம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பலரும் அவருடைய கதாபாத்திரத்தை விமர்சிக்க தொடங்கியதால் எதிர்மறையான விமர்சனங்களில் புவனேஸ்வரி சிக்கினார். இதனால் புவனேஸ்வரி சற்று வேதனையும் அடைந்தாராம். ஷங்கர் சொல்லி நடித்தோம் இப்படி ஆகிவிட்டது என்று வேதனைப்பட்டாராம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…