Margazhi Thingal: இந்த பள்ளிப்பருவ காதல் ஒன்னு சேருமா? பாரதிராஜாவின் ‘மார்கழி திங்கள்’ டீசர்!
மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் பாரதிராஜா நடிப்பில் உருவாகி உள்ள ‘மார்கழி திங்கள்’ படத்தின் டீசரை இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார். இந்தப் படம் மூலம் மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகிறது.
பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் அறிமுக நடிகைகளான ரக்ஷனா மற்றும் ஷியாம் செல்வன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மார்கழி திங்கள் படத்தின் டீசரை இயக்குனர் மணிரத்னம் இன்று மாலை 5 மணிக்கு வெளியிட்டார்.
டீசரை வைத்து பார்க்கையில், இப்படம் ஒரு கிராமத்தின் பின்னணியில் உருவாகியிருக்கும் பள்ளிப்பருவ காதலை பற்றியது என்று தெரிகிறது. பள்ளிப்பருவத்தில் காதலிக்கும் ஒரு காதல் ஜோடி, ஒரு கட்டத்தில் வீட்டில் சொன்ன என்ன ஆகும் என்ற சஸ்பென்ஸுடன் முடிவடைந்துள்ளது. இறுதியில் அந்த ஜோடி ஒன்னு சேர்ந்ததா? என்பது தான் படத்தின் கதை போல் தெரிகிறது.
வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் இயக்குனர் சுசீந்திரன் இந்த படத்தை தயாரிக்க, இளையராஜா இசையமைக்கிறார். 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவும் இளையராஜாவும் இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.