இயக்குனர்கள் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் பாரதிராஜா!

Default Image

சமீபத்தில், இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக முத்த இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.  இந்நிலையில்,இயக்குனர்கள் சங்க தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ” கடந்த மாதம் நடைபெற்ற நமது சங்க பொதுக்குழுவில், நமது சங்க நிர்வாகிகள் இயக்குனர்கள், இதணை, துணை உதவி இயக்குனர்கள், பேராதரவுடன் போட்டியின்றி என்னை தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு மிகவும் நன்றி.

ஆனால், தேர்தலில் போட்டியிடாமல் ஒரு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அதனால் ஏற்படும் சங்கடங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன். ஆகையால் ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்ந்தெடுக்க வசதியாக எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளேன். ஒரு மூத்த இயக்குனராக நமது சங்க வளர்ச்சிக்கும், உறுப்பினர்களின் எதிர்கால எனது வழிகாட்டுதலும், பேரன்பும் என்றும் தொடரும்.” என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்