Bharathiraja and ivana [File Image]
Ivana : படப்பிடிப்பு தளத்தில் நடிகை இவானாவை பாரதி ராஜா செல்லமாக திட்டியுள்ளார்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா எப்போதுமே மற்றவர்களிடம் ஜாலியாக பேசும் ஒரு குணம் கொண்ட மனிதர். இதனை அவர் பேட்டிகளில் பேசும் போது தெரியும். ஒரு காலத்தில் ஹிட் படங்களை இயக்கி கொண்டு இருந்த அவர் தற்போது சமீபகாலமாக படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்து கலக்கி கொண்டு இருக்கிறார். கடைசியாகதிருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள கள்வன் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பின் போது இவானாவை பாரதிராஜா திட்டினாராம்.
அதும் சீரியஸ் ஆக எல்லாம் திட்டவில்லை ஜாலியாக திட்டி இருக்கிறார். ஒரு முறை ஷூட்டிங்கின் போது இவானா பாரதி ராஜாவை கண்டுகொள்ளாமல் போய்விட்டாராம். உடனடியாக ஏய் இங்க வா நான் யார் தெரியுமா என்ன நீ என்னை கண்டு கொள்ளலாமா போற? நான் யாருனு சொல்லுன்னு கேட்டாராம் அதற்கு இவானா சில நேரம் யோசித்து பாரதிராஜா என்று கூறினாராம்.
அவர் அப்படி மிரட்டிய அடுத்த நாளில் இருந்து இவானாவை எங்கு பார்த்தாலும் குட் மார்னிங் என்று கூறிவிடுவாராம். பாரதி ராஜா அன்று செல்லமாக மிரட்டிய காரணத்தால் தான் இவானா பயந்து போய் பாரதிராஜாவிடம் பேசினாராம். இந்த தகவலை இயக்குனர் பாரதிராஜாவே ஜாலியாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…