நாசர் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ் போட்டி

Default Image

நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசர் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து பாக்கியராஜ் போட்டியிடுகிறார்.
நடிகர் சங்கத்தில் பொறுப்பு வகிக்கும், நாசர், விஷால், கார்த்தி ஆகியோரின் பதவிக்காலம் கடந்த அக்டோபர் மாதமே நிறைவடைந்த நிலையில், நடிகர் சங்க வேலைகள் நிறைவு பெறாததால், 6 மாத காலம் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
இதனையடுத்து நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், ஜூன் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் எனவும், வேட்பு மனுக்கள் ஜூன் 11-ம் தேதி பரிசீலிக்கப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல், ஜூன்-14-ம் தேதி மாலை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஜூன் 23-ம் தேதி, சென்னை சத்யா ஸ்டுடியோவில் வைத்து, காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் அலுவலரான ஒய்வு பெற்ற நீதிபதி, பதமநாபன் தெரிவித்தார்.
நாசர் தலைமையிலான பஞ்ச பாண்டவர் அணி இந்த முறையும் போட்டியிடுகிறது.அந்த அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
தலைவர் பதவிக்கு நடிகர் நாசர் அவர்களும், துணை தலைவர் பதவிக்கு நடிகர்கள் பூச்சிமுருகன் மமற்றும் கருணாஸ் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.அதே போல், பொதுச் செயலாளர் பதவிக்கு நடிகர் விஷால் அவர்களும்,பொருளாளர் பதவிக்கு நடிகர் கார்த்தி அவர்களும் போட்டியிடுகிறார்கள்.
இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசர் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து பாக்கியராஜ் போட்டியிடுகிறார்.மேலும் ஐசரி கணேஷ் செயலாளர் பதவிக்கும், குட்டி பத்மினி  மற்றும் உதயா துணைத் தலைவர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்