ராதே ஷ்யாம் நஷ்டத்தால் சம்பளத்தில் பாதியை கொடுத்த பாகுபலி பிரபாஸ்.!

Default Image

இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ராதே ஷ்யாம்’.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மேலும், சச்சின் கடேகர், சத்யராஜ், ஜெயராம், பிரியதர்ஷி, ஜெகபதி பாபு, முரளி சர்மா போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. காலத்துக்கும் காதலுக்கும் இடையிலான போட்டியில் வெல்லப்போவது எது என்பதை சொல்லியிருக்கும் கதையே இந்த படம். கடந்த 11-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியானது.

வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்றே கூறலாம். இதனால் படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு கிட்டத்தட்ட 100கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, படத்தின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், நடிகர் பிரபாஸ் தனது சம்பளத்தில் 50 கோடி கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபாஸ் இந்த படத்திற்காக 100 கோடி சம்பளம் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Bomb threat in EPS house at chennai
Pakistan Minister Khawaja asif
AR Rahman
TN Minister Palanivel Thiyagarajan say about TN Internet
RN Ravi
PahalgamTerroristAttack