பகாசுரன் தப்பான படமில்ல, தப்பு பண்றவங்களுக்கான படம்…நடிகர் நட்டி பேச்சு.!
நடிகர் நட்டி தற்போது இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள “பகாசுரன்” திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், படத்தின் ப்ரோமஷனுக்காக நடிகர் நட்டி சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு “பகாசுரன்” படம் பற்றி பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய நட்டி ” பகாசுரன் தப்பான படமில்ல, தப்பு பண்றவங்களுக்கான படம். வீட்டில் இருக்கும் ஒரு பயன் தவறான நிலைக்கு போகும் போது அவனை சுற்றி என்ன நடக்கிறதோ அதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம். ஒரு வீட்டில் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றால் அவர்களை கண்காணிப்பது மிகவும் அவசியமான ஒன்று.
அதற்காக ரொம்பவும் கண்காணிக்க கூடாது. ஒவ்வொரு நேரத்தில் அவன் என்ன செய்கிறான் என்பதை பார்த்துக்கொண்டாள் போதும். அவன் தவறான வழியில் செல்லமாட்டேன். இது ரொம்ப முக்கியம். இந்த கதை தான் “பகாசுரன்” என கூறியுள்ளார்.