இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் பேட்ட இந்த படத்திற்கு சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.ரஜினியுடன் முதல் படத்தில் இணையும் இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கடந்த ஜூன் மாதத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்த நிலையில். சமீபத்தில் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் முறுக்கு மீசையில் ரஜினி இருப்பது போன்ற படத்தையும் படக்குழு வெளியிட்டது. இந்த போஸ்டரும் பெருத்த வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் லக்னோ மற்றும் வாரணாசியில் விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்ட படபிடிப்பு தொடர்பாக தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அதில் பேட்ட படத்தின் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டதைவிட 15 நாட்களுக்கு முன்னதாகவே முடிந்துள்ளது.
படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் மற்றும் ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு உள்பட படக்குழு அனைவருக்கும் நன்றி. அனைவருக்கும் மகிழ்ச்சியான விஜயதசமி வாழ்த்துக்கள்” என அவர் பதிவிட்டுள்ளார்.
DINASUVADU
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…