நார்வேயில் ஆண்டு தோறும் தமிழ்த்திரைப்பட திருவிழாவானது நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான விருது பட்டியலானது வெளியாகியுள்ளது.
அதில் சிறந்த நடிகராக பெரிதும் ரசிகர்களை கவர்ந்த 96 படத்தில் நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதே படத்தில் ஜானுவாக நீங்கா இடம்பிடித்த த்ரிஷா சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் சிறந்த திரைப்படமாக பெரிதும் பேசப்பட்ட பரியேறும் பெருமாள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறந்த இயக்குனராக விஜய்சேதுபதியின் தயாரிப்பில் வெளிவந்த மேற்கு தொடர்ச்சி மலை’ என்ற படத்தை எடுத்த லெனின் பாரதி தேர்வுப்பட்டுள்ளார். வெற்றி விழா கொண்டாடி வருகின்ற கனா படத்தை தயாரித்தவரும் நடிகருமான சிவகார்த்திகேயன் சிறந்த தயாரிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.சிறந்த இசையமைப்பாளராக பரியேறும் பெருமாள்,வடசென்னை படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விருதுகள் ஏப்ரல் மாதம், நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடக்கும் விழாவில் வழங்கப்படவுள்ளது.
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம்…
மும்பை : கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் உலகையே அதிரவைத்தது. இந்த தாக்குதலை…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய…
டெல்லி : 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டது.…
சென்னை : தீபாவளியையொட்டி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் வெற்றிகரமாக 4வது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சொல்லப்போனால், சிவகார்த்திகேயன்…
மும்பை : 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று கடந்த சனிக்கிழமை முடிவுகள் வெளியானது. இந்த முறையும்…