லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த அகாடமி விருது விழாவில் தி வேல் படத்திற்காக பிரெண்டன் ஃப்ரேசர் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றார்.
ஆஸ்கர் விருது விழா:
உலகப் புகழ்பெற்ற திரைத்துறை விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, 95-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கி பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பிரமாண்டமாக நடைபெறும் இந்த விருதுவிழாவில் பல இந்திய சினிமாவை சேர்ந்த பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர்.
சிறந்த நடிகர்:
இந்த நிலையில், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ப்ரின்டன் ஃபரேஸர் வென்றார். அதாவது, சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ’தி வேல்’ படத்திற்காக வென்றார் பிரெண்டன் ஃப்ரேசர். டேரன் அரோனோஃப்ஸ்கி இயக்கிய மற்றும் சாமுவேல் டி ஹன்டரால் அவரது சொந்த நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் பிரேசர் உடல் பருமனான ஆசிரியராக நடித்துள்ளார். 54 வயதான அவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.
சிறந்த நடிகை:
இதுபோன்று, சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை ‘EverythingEverywhereAllAtOnce’ திரைப்படத்திற்காக மிஷ்ஷெல் யோ வென்றுள்ளார். சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்ற முதல் ஆசியப்பெண் என்ற சாதனையையும் படைத்தார். இதன்பின் பேசிய அவர், கனவுகள் நனவாகும் என்பதற்கு இது ஒரு சான்று. உலகில் உள்ள அனைத்து அம்மாக்களுக்கும் இதை நான் அர்ப்பணிக்க வேண்டும். அவர்கள் தான் சூப்பர் ஹீரோக்கள், அவர்கள் இல்லாமல் நாங்கள் இல்லை என தெரிவித்தார்.
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…