நடிகர் ரஜினிகாந்த் இதுவரை பல வெற்றி படங்களில் நடித்து ஹிட் கொடுத்து இருக்கிறார். அதைப்போலவே சில வெற்றிப்படங்களில் நடிப்பதையும் தவறவிட்டும் இருக்கிறார். அந்த வகையில், ரஜினிகாந்த் நடிக்க மறுத்த திரைப்படங்கள் என்னவெல்லாம் என்பதனை விவரமாக இந்த பதிவில் பார்க்கலாம்.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனா திரைப்படம் தான் முதல்வன். இந்த திரைப்படத்தின் கதையை இயக்குனர் ஷங்கர் முதலில் ரஜினிகாந்திடம் கூறினார். ஆனால், படம் அரசியல் கதையை கொண்ட படமாக இருந்த காரணத்தால் ரஜினிகாந்த் முதல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மறுத்துவிட்டார்.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன திரைப்படம் ரமணா. இந்த திரைப்படத்தின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் முதலில் ரஜினிகாந்திடம் தான் கூறினாராம். ஆனால், அந்த சமயம் ரஜினிகாந்த் மிகவும் பிசியாக இருந்த காரணத்தால் ரமணா படத்தில் நடிக்காமல் பட வாய்ப்பை மறுத்துவிட்டார்.
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி தமிழ் சினிமாவில் தரமான படங்களின் பட்டியலில் இருக்கும் திரைப்படம் என்றால் இந்தியன் என்று கூறலாம். இந்த திரைப்படம் கமல்ஹாசனின் சினிமா வாழ்க்கையில் பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம். இந்த படத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் ரஜினிகாந்த் தான். ஆனால், படத்தின் கதையை கேட்கும் போதே ரஜினி தனக்கு இந்த கதை செட் ஆகாது என்று கூறிவிட்டாராம்.
கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கும் திரைப்படம் துருவநட்சத்திரம். ஸ்பை த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் முதலில் நடிகர் ரஜினிகாந்த் தான் நடிக்கவிருந்தாராம். பிறகு இந்த கதை பெரிய அளவில் ரஜினியை ஈர்க்கவில்லை என்ற காரணத்தால் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் மறுத்துவிட்டாராம்.
மலையாளத்தில் வெளியாகி மாபெரும் ஹிட்டான திரைப்படம் த்ரிஷ்யம். இந்த திரைப்படத்தை கமல்ஹாசனை வைத்து தமிழும் இயக்குனர் ஜீத்து ஜோசப் ரீமேக் செய்திருந்தார். இந்த ரீமேக்கில் நடிக்க முதலில் நடிகர் ரஜினிகாந்த் தான் தேர்வு செய்யப்பட்டு இருந்தாராம். ஆனால், படத்தில் வரும் சில காட்சிகள் ரஜினிக்கு 2 காட்சிகள் மட்டும் சரியாக படவில்லையாம். அதில் தான் நடித்தால் சரியாக இருக்காது என கூறி மறுத்துவிட்டாராம். ஒரு காட்சி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மற்றோரு காட்சி போலீசார் அடிப்பது போல ஒரு காட்சி அப்படி நடித்தால் தன்னுடைய ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று கூறி ரஜினிகாந்த் பாபநாசம் படத்தை மிஸ் செய்துவிட்டாராம்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…