ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி அதிகம் வசூல் செய்த படங்கள்!

ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள் எந்த அளவிற்கு வசூல் செய்து சாதனை படைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த அளவிற்கு அவருடைய படங்கள் தமிழ் சினிமாவையே நிமிர வைத்து இருக்கிறது. இந்நிலையில், ரஜினிகாந்த் நடிப்பில் இதுவரை வெளியாகி அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள் பற்றி பார்க்கலாம்.
1.2.0
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 2.0. இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 800 கோடி வசூல் செய்து ரஜினியின் சினிமா கேரியரில் அதிகம் வசூல் செய்த திரைப்படமாக திகழ்கிறது. அது மட்டுமின்றி தமிழில் வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையையும் இந்த திரைப்படம் தான் வைத்து இருக்கிறது.
2. ஜெயிலர்
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தினை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர் என்றே சொல்லலாம். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது என்றே சொல்லலாம். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து ரஜினிக்கு அதிகம் வசூல் கொடுத்த 2-வது படம் என்ற சாதனையில் உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க மறுத்த திரைப்படங்கள்?
3.கபாலி
இயங்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கபாலி. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. வசூல் ரீதியாக மட்டும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 290 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது.
4.எந்திரன்
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் எந்திரன். இந்த திரைப்படம் அந்த சமயமே பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றி அடைந்தது என்றே சொல்லலாம். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பதிவு செய்தது. வசூல் ரீதியாக மட்டும் இந்த திரைப்படம் 280 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது.
5.தர்பார்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை என்றாலும் கூட வசூல் ரீதியாக ஒரு அளவிற்கு ஹிட் ஆன படம் என்றே சொல்லலாம். வசூல் ரீதியாக மட்டும் தர்பார் திரைப்படம் 230 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து ரஜினியின் சினிமா வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த 5-வது படம் என்ற சாதனையில் இருக்கிறது.