indian 2 [File Image]
இந்தியன் 2 : ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். முதல் பாகம் பெரிய வரவேற்பை பெற்று ஹிட் ஆகி இருக்கும் நிலையில், படத்தின் இரண்டாவது பாகம் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது பாகம் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
படம் வரும் ஜூலை 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு மும்மரமாக இறங்கியுள்ளது. அந்த வகையில், படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் இயக்குனர் ஷங்கர், நடிகர்கள் கமல்ஹாசன், சித்தார்த் ஆகியோர் கலந்து கொண்டு படத்தை பற்றி பல விஷயங்கள் பேசினார்கள்.
அப்போது பேசிய கமல்ஹாசன் ” பொதுவாக சென்சார் போர்டில் அதிகம் படங்களை பற்றி பேச மாட்டார்கள். ஆனால் இந்தியன் 2 படத்திற்காக, அவர்கள் நிறையவே பேசினார்கள். படத்தை மிகவும் அவர்கள் நேசித்தார்கள், அவர்கள் அதைப் பற்றி நீண்ட நேரம் பேசினார்கள். கண்டிப்பாக இது ரசிகர்களுக்கு சிறப்பான படமாக இருக்கும் என நம்புகிறேன்.
இந்தப் படத்தில் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். இந்தியன் முதல் பாகத்தை ஒப்பிடும்போது, இந்தியன் 2 பணத்தின் அடிப்படையில் மட்டுமல்ல மற்ற விஷயங்களிலும் மிகப் பெரிய படமாக அமையும். அந்த நேரத்தில் இந்தியன் எடுக்கப்பட்டபோது தமிழ் சினிமாவில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் அது.
படத்தோட பட்ஜெட் ரொம்பவே பெரிய பட்ஜெட் என்பதால் நாங்கள் மிகவும் அந்த சமயம் பயந்தோம். ஆனால், இந்தியன்2 முன் முதல் பாகம் ஒரு சாதாரண குடும்பம். இரண்டாவது பாகம் ரொம்பவே வசதியான குடும்பம். அந்த அளவுக்கு பெரிய, பிரமாண்டமான படம் இந்தியன் 2. படத்தினை ஷங்கர் அருமையாக இயக்கியுள்ளார். அவர் ஒரு விஷயத்தில் கூட சமரசம் செய்ய மாட்டார். நம் இயக்குனர்கள் நம்ப முடியாததை நம்ப வைக்கிறார்கள். படம் பாருங்கள் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…