5 ஆண்டுகளாக படுத்த படுக்கை: பிரபல இயக்குனரின் மனைவிக்கு உதவிகளை வழங்க – மு.க.ஸ்டாலின் உத்தரவு!

Vikraman wife

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக படுக்கையில் உள்ள இயக்குநர் விக்ரமனின் மனைவிக்கு தேவையான சிகிச்சை அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

குடும்பங்கள் கொண்டாடும் இயக்குனராக விக்ரமனுக்கு இல்லத்தரசிகளை திரையரங்கிற்கு வரவழைக்கும் பெருமை உண்டு. பல தரமான திரைப்படங்களை வழங்கிய இவர், கடந்த சில வருடங்களாக எந்த படத்தையும் இயக்கவில்லை.

அது ஏனென்று பார்க்கையில், அதன் பின்னணியில் இருக்கும் சோகமான கதை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அவரது மனைவி கடந்த ஐந்து வருடங்களாக நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இயக்குனர் விக்ரமின் மனைவி ஜெயப்ரியா நடனக் கலைஞர் என்பதால், பல மேடைகளில் நடனமாடியுள்ளார். ஆனால், இப்போது அவரால் உட்காரவோ நடக்கவோ முடியவில்லை.

இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய விக்ரமன், ஜெயப்ரியா உடல் வலி காரணமாக 5 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், முதுகில் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில், அதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சிகிச்சை முடிந்த பின், அவரது கால்களை அசைக்க முடியாதுவாறு உணர்ந்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் அவளுக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை தான் என்று தெரிய வந்தது.  தவறான சிகிச்சை காரணாமாக நரம்பு பாதிக்கப்பட்டதால் நடக்கவோ எழுந்திருக்கவோ முடியவில்லை.

எம்.ஜி.ஆர் தான் எனக்கு முக்கியம்! இந்தி பட வாய்ப்புகளை உதறி தள்ளிய நடிகை லதா!

இதையடுத்து, தனது மனைவிக்கு இருக்கும் இந்த பிரச்சனையை தீர்க்க விக்ரமன் தனது பாதி சொத்தை விற்றுள்ளார். அதன் பின்னர், செய்வதன்றி தவித்த விக்ரமனுக்கு அவ்வப்போது, திரையுலகைச் சேர்ந்த பலருக்கு இலவச மருத்துவம் மற்றும் கல்வி உதவிகளை வழங்கி வந்தனர்.

விஸ்வாசம் வசூலை தொட முடியாமல் தவிக்கும் லியோ! தமிழகத்தில் இந்த நிலைமையா?

இறுதியாக, விக்ரமன் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். தற்போது இயக்குனர் விக்ரமனின் கோரிக்கையை ஏற்றிக்கொண்டு, இயக்குநர் விக்ரமனின் மனைவிக்கு தேவையான சிகிச்சை அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 15க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் அவரின் இல்லத்திற்கு சென்று பரிசோதனை செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - TN Rain
06.11.2024 Power Cut Details
VCK Leader Thirumavalavan - Tamilnadu CM MK Stalin
yellow alert rain
VCK Leader Thirumavalavan - TVK Leader Vijay
Sunil Gavaskar
Bengaluru