இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி திருமதி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என்ற பெயரில் சொந்தமாக பட நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் படங்களை தயாரிக்கவுள்ளார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது.
இதனை தொடர்ந்து, கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழில் ஒரு திரைப்படம் ஒன்றை தயாரிப்பதாகவும், சாக்ஷி சிங், தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு படமாக அந்த படம் உருவாகவுள்ளதாகவும் படத்தை பிரபல இயக்குனரான ரமேஷ் தமிழ்மணி இயக்குவதாகவும் அறிக்கை வெளியீட்டு தோனி தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இப்படத்தை இயக்கும் இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி ஊடகத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்றில் பேசியதாவது “பிரமாதமான ஒன்லைன் ஒன்றை சாக்ஷி சிங் எழுதியிருந்தாங்க. அந்த ஓன்லைனை திரைப்படமாக செய்யப்போவதாகவும் , அந்த ஒன்லைனை என்னிடம் கேட்குறீங்களான்னும் கேட்டாங்க. நானும் அந்த ஒன்லைனை மெருகேற்றி முழுக்கதையாக்கினேன்.
இதையும் படியுங்களேன்- வெந்து தணிந்தது காடு படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..?
அந்த கதையை நான் சாக்ஷிகிட்ட சொன்னேன். அப்போது தோனியும் அவருடன் இருந்து முழுக்கதையும் கேட்டார். அவங்களுக்குக் அந்த கதை மிகவும் பிடிச்சிருந்தது. கதை முழுவதையும் கேட்டுவிட்டு “நீங்களே இயக்கினாதான் சரியா வரும்’ன்னு சொல்லி, இயக்கவும் சொல்லிவிட்டார்கள். மனதை இதமாக்குற ஒரு நல்ல திரைப்படமாக இது இருக்கும்” என்று கூறியுள்ளார் இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி.
மேலும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. தோனி தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரியங்கா மோகன் அல்லது மாளவிகா மோகன் நடிப்பார் என்ற தகவலும் இணையத்தில் பரவி கொண்டிருக்கிறது. விரைவில் யார் யாரெல்லாம் நடிப்பார்கள் படத்திற்கான டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…