கே.ஜி.எஃப்-2 திரைப்படத்துடன் அமீர்கான் நடிப்பில் லால் சிங் சதா எனும் திரைப்படமும் ஏப்ரல் 14இல் வெளியாக உள்ளது. அதே தினத்தில் பீஸ்ட், விக்ரம் படமும் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாம்.
வரும் 2022 கோடை விடுமுறையில் இந்திய சினிமாவில் ஒரு சினிமா யுத்தமே நடக்க போகிறது போல,! அந்த அளவிற்கு படங்கள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே வெகுநாட்களாக காத்துக்கொண்டிருந்த கே.ஜி.எஃப் படத்தின் 2ஆம் பாகம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு விட்டது.
யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் முதல் பாகம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது. மேலும், அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை இந்தியா முழுவதும் ஏற்படுத்தி விட்டது. இப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகும்.
அதே நாளில் தமிழில் தளபதி விஜயின் பீஸ்ட் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.விஜய் படம் தீபாவளி, பொங்கல் அல்லது கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆகிய தேதியில் தான் கடந்த சில வருடங்களாக வெளியாகி வருகிறது. அதே நாளில் தான் கமல்ஹாசனின் விக்ரம் படமும் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாம்.
தற்போது, ஹிந்தியில் அமீர்கான் நடிப்பில் லால் சிங் சதா திரைப்படமும் ஏப்ரல் 14இல் வெளியாகும் என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. கே.ஜி.எஃப்-2 போன்ற பிரமாண்ட படத்துடன் பிராந்திய எதிர்பார்ப்பு படங்களும் வெளியாவது கே.ஜி.எஃப்-2விற்கு பின்னடைவா அல்லது மற்ற படங்களின் வசூல் பாதிக்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…