ஒரு பாட்டு 1 கோடி வேணும்.! அடம்பிடித்த பீஸ்ட் நாயகி.! கொடுத்து அனுப்பிய படக்குழு.!
தெலுங்கில் பிரபல நடிகையாக வளம் வரும் பூஜாஹெக்டே தற்போது விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. படத்தை பார்த்த அனைவரும் விஜய் பூஜாஹெக்டே ஜோடி நன்றாக இருந்ததாக கருத்துக்களை கூறினார்கள்.
இந்த படத்தை தொடர்ந்து ஆச்சார்யா மற்றும் சல்மான் கானுக்கு ஜோடியாக ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், நடிகை பூஜா ஹெக்டேவை நடிகர் வெங்கடேஷ் நடிக்கும் F3 படத்தில் ஒரே ஒரு குத்து பாடலுக்காக நடனமாட படக்குழு கேட்டுள்ளார்களாம். அதற்கு சம்பளமாக பூஜாஹெக்டே 1 கோடிய 25 லட்சம் கேட்டுள்ளாராம்.
பேச்சுவார்த்தையின் இறுதியில் 1 கோடி கொடுக்க படக்குழு சம்மதித்துள்ளது. பூஜாவும் சம்மதித்துள்ளார். விரைவில் பாடலுக்கான ஷூட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது .
இதற்கு முன்பு நடிகை சமந்தா புஷ்பா படத்தில் இடம்பெற்றிருந்த “ஊ சொல்றியா மாமா” பாடலுக்கு சமந்தா நடனம் ஆடியதற்கு 1 கோடி சம்பளம் வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.