பீஸ்ட்டை அந்தரத்தில் விட்டு சென்ற நெல்சன்.! ரஜினி பட வேலை கோலாகல ஆரம்பம்.?!

Default Image

அண்ணாத்த திரைப்படத்தின் கலவையான விமர்சனங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியை பலமாக சிந்திக்க வைத்துள்ளது. அதனால், அடுத்த பட இயக்குனரை கவனமாக தேர்வு செய்து வருகிறார் ரஜினிகாந்த்.

இந்த பட்டியலில் தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ், நெல்சன் என பலர் இருந்தனர். ஆனால் அனைவரும் இளம் இயக்குனர்கள்.

 

தற்போது இந்த பட்டியலில் ஓகே வாங்கி இருப்பது பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் தானாம். இவர் கூறிய கதை ரஜினிக்கு பிடித்துப்போக தற்போது அதனை விரிவு படுத்தி வருகிறாராம் நெல்சன்.

நெல்சன் தற்போது இயக்கி வரும் பீஸ்ட் திரைப்படத்தையும், ரஜினியின் அடுத்த படத்தையும் சன் பிக்ச்சர்ஸ் தான் தயாரிக்கிறது என்பதால், நெல்சன் பீஸ்ட் படத்தின் போஸ்ட் ப்ரொடெக்சன் வேலைகளை கவனித்து கொண்டே ரஜினி பட கதையை விரிவு படுத்தி வருகிறாராம்.

பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் முழுதாக முடிந்துவிட்டது. தற்போது எடிட்டிங், சவுண்ட் மிக்சிங் வேலைகள் தான் நடக்கிறது என்பதாலும், இரண்டு பட தயாரிப்பும் சன் பிக்ச்சர்ஸ் என்பதாலும் ரஜினி பட கதை விவாதத்தில் எந்தவித இடையூறும் இன்றி நெல்சன் கலந்துகொண்டு வருகிறார். விரைவில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், ரஜினி நடிக்க நெல்சன் இயக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்