Bayilvan Ranganathan : தனுஷுக்கும் ஜிவிக்கும் 6 வருஷமா சண்டை என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இருவரும் சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையில் நெருங்கிய நண்பர்கள். இவர்களுடைய கூட்டணியில் கூட பல படங்கள் வெளியாகி இருக்கிறது. அந்த படங்களின் ஆல்பம் எல்லாம் எந்த அளவிற்கு ஹிட் என்று சொல்லி தான் தெரியவேண்டும் என்று கூட இல்லை.
இப்போது இவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் ஆரம்ப காலத்தில் அடிக்கடி சண்டைபோட்டு கொள்வார்களாம். இந்த தகவலை நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ஜிவி பிரகாஷ் மற்றும் தனுஷ் இருவரும் நெருங்கிய நண்பர்கள் தான்.
இப்போது அவர்கள் நண்பர்களாக இருக்கலாம். ஆனால், ஒரு 6 வருடங்களுக்கு முன்பு இருவரும் பயங்கரமாக சண்டைபோட்டார்கள். ஒரு 6 வருடங்களுக்கு முன்பு இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்தார்கள். அதன் பிறகு இருவரும் சேர்ந்து படங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்த பிறகு தான் பேசிக்கொள்ளவே தொடங்கினார்கள். அதுவும் ரொம்ப எல்லாம் பேசமாட்டார்கள். படம் பற்றி மட்டும் தன பேசுவார்கள்.
படம் இணைவதற்கு முன்பு வரை ஜிவி பிரகாஷ் மற்றும் தனுஷ் இருவரும் பேசிக்கொள்ளாமலே இருந்தார்கள். இதனை ஜிவி பிரகாஷ் தான் கூறியுள்ளார். நானாக எதுவும் சொல்லவில்லை” எனவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். ஜிவி பிரகாஷ் பல மேடைகளில் தனுஷ் தான் தன்னுடைய நெருங்கிய நண்பர் என்றும் நண்பர்களுக்குள் சண்டை வருவது போல எங்களுக்கும் அடிக்கடி வரும் உடனே நாங்கள் பேசிவிடுவோம் என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…