100 பேரை வீட்டில் தங்க வைத்து சாப்பாடு போட்டு பணம் கொடுத்த அஜித் குமார்!
சென்னையில் வெள்ளம் வந்து மக்கள் பலரும் வெள்ளத்தில் தத்தளித்தார்கள். அவர்களுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்தும் கொடுத்தனர். குறிப்பாக ஹரிஷ் கல்யாண், kpy பாலா, சூர்யா, கார்த்தி, சூரி, விஷ்ணு விஷால் போன்ற பிரபலங்கள் எல்லாம் பணம் கொடுத்து உதவி செய்து இருந்தார்கள். இவர்கள் உதவி செய்தாலும் அஜித் விஜய் போன்ற பெரிய நடிகர்கள் எதுவும் உதவி செய்யவில்லை என்ற விமர்சனங்கள் ஒரு பக்கம் எழுந்தது.
அரசுடன் கைகோர்த்து உதவுங்கள்… மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்.!
பிறகு நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறிருந்தார். எனவே, தன்னுடைய மக்கள் இயக்கம் மூலம் அவர் உதவிகளை செய்தார் என்று தெரிய வந்தது.
ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை! அஜித் செய்த உதவியை விமர்சித்த போஸ் வெங்கட்!
அவரை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் விஷ்ணு விஷால் அமீர்கான் ஆகியோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த செய்தியை அறிந்து அவர்களுடைய நலன் விசாரித்தார். இதனால் மக்கள் கண்கலக்கு தெரியவில்லையா? எனவும் பலரும் கேள்வி எழுப்பினார்கள். குறிப்பாக நடிகர் போஸ் வெங்கட் கூட மக்கள் எப்போதும் உங்க கண்களுக்கு தெரியப்போவது இல்லை என அஜித்தை விமர்சித்து கூறியிருந்தார்.
ஆனால், அஜித் சென்னையில் வந்த வெள்ளத்தின் போது 100 பேரை வீட்டில் தங்க வைத்து 3 நாட்கள் சாப்பாடு போட்டு அவர்கள் வீட்டிற்கு செல்லும் போது ஒவ்வொருவருக்கும் ரூபாய் 10,000 வழங்கியுள்ளதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் ” பாராட்ட வேண்டும் என்றால் நடிகர் அஜித்தை பாராட்டலாம்.
வெள்ளம் வந்த பிறகு உடனடியாக ஒரு 100 பேரை நேரில் அழைத்து அவர்கள் அனைவரையும் தன்னுடைய வீட்டில் தங்கவைத்தார். தங்க வைத்து 3 நாட்களுக்கு அவர்களுக்கு தேவையான சாப்பாடும் கொடுத்தார். அது மட்டுமின்றி வீட்டில் இருந்து போகும் போது அந்த 100 பேருக்கும் ஒரு ஆளுக்கு 10,000 ரூபாய் பணமும் கொடுத்து உதவி செய்தார். அவர் செய்த உதவியை விளம்பரம் யாரும் செய்யவில்லை யாருக்கும் தெரியாமல் அஜித் உதவி செய்துள்ளார் ” எனவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.