சென்னை : பாடகி சுசித்ரா பைத்தியக்கார கிரிமினல் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
பிரபல பின்னணி பாடகியான சுசித்ரா பெயர் தான் கடந்த சில நாட்களாகவே ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே அவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுக்கும்போது பேசிய விஷயங்கள் தான். பயில்வான் ரங்கநாதன், தனுஷ், கார்த்திக் குமார், த்ரிஷா என பிரபலங்களை பற்றி பேசியது பெரிய அளவில் பேசும் பொருளாகி இருக்கிறது.
அந்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் பற்றி சுசித்ரா ” நான் ஹோட்டல் ரூமில் இருந்தேன் என்று என்னை பற்றி பயில்வான் ரங்கநாதன் தவறாக பல விஷயங்களை சொன்னார். இவரெல்லாம் சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் பிட்டு படங்களுக்கு நடிகைகளை அரேஞ்ச் செய்து கொடுக்கும்ஏஜெண் வேலையை செய்து கொண்டு இருந்தவர். அவர் சீக்கிரமே சாகவேண்டும். அவருடைய சாவு எப்படி இருக்கணும் தெரியுமா, எல்லாரு முன்னாடியும் அவமானப்பட்டு, நடுரோட்டில் கதறி அழுது தினம் சாகணும்” என்று ஆதங்கத்துடன் வெளிப்படையாகவே சுசித்ரா பேசினார்.
இந்த நிலையில், சுசித்ரா தன்னை பற்றி பேசியதற்கு பதில் அளிக்கும் விதமாக பயில்வான் ரங்கநாதன் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் ” சுசித்ரா பைத்தியக்கார கிரிமினல் தானமாக பேசி கொண்டு இருக்கிறார். அவர் பேசுவதை பார்க்கும்போது மனநிலை நோயாளி போல தெரிகிறது.
ஆரம்பத்தில் என்னை பற்றி தவறாக பேசவேண்டியது பிறகு கடைசியில் என்னை பற்றி உயர்வாக பேசவேண்டியது. இப்படியெல்லாம் பேசுவது மன நோயாளி பேச்சு தானே? சுசித்ரா மீது சில புகார்கள் வந்த காரணத்தாலும், அவருடைய நடவடிக்கை சரியாக இல்லை என்ற காரணத்தாலும், கார்த்திக்குமார் ரொம்பவே அவரை திருத்த முயற்சி செய்தார்.
முயற்சி செய்தும் முடியவில்லை என்ற காரணத்தால் தான் கார்த்திக்குமார் சுசித்ராவை விவாகரத்து செய்தார். சுசித்ராவை பொறுத்தவரையில் அவர் மன நோயாளி தான். அப்படி கூறி தான் ஒரு வழக்கில் இருந்து கூட வந்தார். விவாகரத்து செய்த பிறகு தனது முன்னாள் கணவன் பற்றி பேசுவது சட்டப்படி குற்றம். ஆனால், அது கூட தெரியாமல் சுசித்ரா பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் பேசிய பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகள் எல்லாமே சட்டத்திற்கு விரோதமானது” என்றும் சுசித்ராவை விமர்சித்து பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…