பல கோடிகளை இழந்த நடிகை ராதிகா? பயில்வான் ரங்கநாதன் சொன்ன கதை!

bayilvan ranganathan

வெள்ளித்திரையில் சரி சின்னத்திரையிலும் சரி கொடி கட்டி பறந்துவரும் ஒரு நடிகை ராதிகா என்று கூறலாம். ஒரு காலத்தில் ஹீரோயினாக கலக்கி வந்த இவர் சமீபகாலமாக திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சமீபத்தில் கூட சந்திரமுகி 2, லவடுடே ஆகிய படங்களில் எல்லாம் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக சில படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில், நடிகை ராதிகா படங்களை தயாரித்து நஷ்டத்தில் இருந்து மீண்ட கதையை நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஆறு பிலிம்பேர் விருதுகளை தட்டித்தூக்கிய அனிமல்!

நடிகை ராதிகா முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டு இருந்த காலத்தில் சேர்த்து வைத்த பணங்களை வைத்து சொந்தமாக சில படங்களையும் தயாரித்தாராம். அவர் தயாரித்த படங்கள் எல்லாம் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காமல் வசூல் ரீதியாக தோல்வி அடைந்ததாம். அதன் மூலம் ராதிகாவுக்கு நஷ்டமும் ஏற்பட்டதாம்.

பணம் நஷ்டம் அடைந்தாலும் அதனை எல்லாம் பற்றி கவலைப்படாத நடிகை ராதிகா தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பது தயாரிப்பது என செய்து நஷ்டத்தை சரி செய்து கொண்டாராம். ராதிகா தயாரித்த படங்கள் எல்லாம் மொக்க எனவும் அதனால் அவருக்கு பெரிய அளவில் நஷ்டமும் ஏற்பட்டது எனவும் தொலைக்காட்சி தொடர்களை தயாரித்தது ஹிட் எனவும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்